தஞ்சை மாவட்டம் சேதுபாவத்திரம் ஒன்றியத்திற்குட்பட்ட செந்தலை வயல் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மக்களை தேடி மருத்துவ முகாம் நடைபெற்றது.
இந்த மருத்துவ முகாமினை செந்தலை ஊராட்சி நிர்வாகமும் தன்னார்வ தொண்டு அமைப்பான செந்தலைப்பட்டினம் பொதுநல சங்கமும் ஏற்பாடு செய்திருந்தனர். செந்தலையில் நடைபெற்ற பொது மருத்துவ முகாமினை பேராவூரணி தொகுதி எம்.எல்.ஏ. அசோக்குமார் அவர்கள் தொடங்கி வைத்தார்.
முகாமில் பொது மக்களுக்கு பொது மருத்துவம், சர்க்கரை, இரத்த அழுத்தம், மகப்பேறு மருத்துவம், கண்பரிசோதனை, ஈசிஜி, இரத்த பரிசோதனை, இரத்த வகை கண்டறிதல், இதய சம்பந்தப்பட்ட நோய்கள், உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு மருத்துவம் அளித்து, உரிய மருத்துவ அறிவுரைகள் வழங்கப்பட்டது. இந்த பொது மருத்துவ முகாமில் பல துறை சார்ந்த மருத்துவர்கள் செவிலியர்கள் மருத்துவ சேவையை செய்தனர். இந்த பொது மருத்துவ முகாமின் மூலம் ஊர் பொது மக்கள் சுற்றுவட்டார மக்கள் என பலர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
இந்த முகாமில் N.அசோக்குமார்,MLA பேரூராட்சி பெருந்தலைவர் சேகர், ஒன்றிய பெருந்தலைவர் முத்துமாணிக்கம், ஒன்றிய கவுன்சிலர் செய்யது முகமது, செந்தலை ஊராட்சி தலைவர் ரகுமத்துல்லா, என பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர். முன்னதாக நிகழ்ச்சிக்கு வருகை தந்த சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார் அவர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர். பின்னர் ஊர் ஊர் ஜமாஅத் மற்றும் பொதுநல சங்கம் மற்றும் ஊராட்சி சார்பாகவும் செந்தலையில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்துத்தர வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 تعليقات
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.