கொரானா கட்டுப்பாடுகளை நீக்கிய சவூதி அரேபியா PCR டெஸ்ட் , தனிமைப்படுத்தல் , முகக்கவசம் , கட்டாயமில்லை .. முழு விவரம் ...

கொரோனா பரவல் காரணமாக விதிக்கப்பட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை நீக்கி அமீரகம் , ஓமான் போன்ற நாடுகள் அறிவித்த நிலையில் தற்பொழுது சவூதி அரேபியாவும் கொரோனா கட்டுப்பாடுகளின் தளர்வுகளின் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

சவுதி அரேபியாவிற்கு பயணிகள் இனி வருகை தரும் பயணிகள் இனி கொரோனா பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த வேண்டிய அவசியமில்லை என்று சவுதி அறிவித்துள்ளது. சவூதி அரேபியாவிற்கு வரும் பயணிகள் தங்கள் வருகையின் போது PCR பரிசோதனை மேற்கொள்ள வேண்டியதில்லை எனவும் , தனிமைப்படுத்தல் நடைமுறைகள் நீக்கபடுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மசூதிகளில் சமூக இடைவெளியுடன் நடத்தப்பட்டு வந்த தொழுகை தற்போது இடைவெளியின்றி தொழுகலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேரடி விமான போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்த அனைத்து நாடுகளுக்கும் இனி நேரடி விமான சேவை தொடங்க அனுமதி சவுதி வழங்கியுள்ளது. மேலும் பொதுவெளியில் முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை என்றும் பொதுமக்கள் மசூதிகளிலும் , உட்புறப் பகுதிகளிலும் முகக்கவசம் அணியுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் வெளியிடங்களில் முகக்கவசம் கட்டாயம் இல்லை ஆனால் ஷாப்பிங் மால்கள் , திரையரங்கம் போன்ற உட்புறங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் எந்த வகையான விசிட் விசாக்களில் பயணிகள் சவூதிக்கு வந்தாலும் வைரஸ் தொற்று ஏற்பட்டால் அந்த சிகிச்சைக்கான செலவை ஈடுசெய்யும் மருத்துவ காப்பீட்டைப் பெற்றிருக்க வேண்டும். சவுதி உள்துறை அமைச்சகத்தின் இந்த அதிகாரப்பூர்வ கட்டுப்பாடுகளின் தளர்வுகள் நேற்று மார்ச் 5 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇







إرسال تعليق

0 تعليقات