பேராவூரணி - சேதுபாவாசத்திரம் சுற்றுப்பகுதியில் ஏப். 8 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மின்தடை

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி மற்றும் சேதுபாவாசத்திரம் பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக வரும் ஏப்ரல் 8-ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து, தமிழ்நாடு மின் வாரிய உதவி செயற்பொறியாளர் எஸ் கமலக்கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, எதிர்வரும் ஏப்.08 வெள்ளிக்கிழமை அன்று, பேராவூரணி 110/33-11கே.வி துணைமின் நிலையத்திலிருந்து செல்லும் பெருமகளுர் 33 கே.வி, திருவத்தேவன் 33 கே.வி, ஆவணம் 33 கே.வி, ஒட்டங்காடு 33 கே.வி, திருச்சிற்றம்பலம் 33 கே.வி மற்றும் வா.கொள்ளைக்காடு 33 கே.வி ஆகிய மின்பாதைகள் (நகர் பேராவூரணி, ஆவணம் பைங்கால் சித்தாதிக்காடு, கொன்றைக்காடு, ஒட்டங்காடு, புனல்வாசல் துறவிக்காடு, கட்டயங்காடு, மதன்பட்டவூர், திருச்சிற்றம்பலம், செறுவாவிடுதி, சித்துக்காடு, பெருமகளுர், ரெட்டவயல், மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும்) மற்றும் சேதுபாவசத்திரம் 110/33 கே.வி துணைமின் நிலையத்திலிருந்து செல்லும் நாட்டாணிக்கோட்டை 33 கே.வி, குருவிக்கரம்பை 33 கே.வி, கள்ளம்பட்டி 33 கே.வி, பள்ளத்துர் 33 கே.வி, நாடியம் 33 கே.வி ஆகிய மின்பாதைகள் (மல்லிப்பட்டினம், சேதுபாவசத்திரம், குப்பதேவன், திருவத்தேவன், கள்ளம்பட்டி, கழனிவாசல், குருவிக்கரம்பை, மருங்கப்பள்ளம், செருபாலக்காடு, பேராவூரணி சேதுரோடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் செல்லும் மின்பாதைகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை, மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் மின் தடை ஏற்படும்.  

மேலும், பொதுமக்கள் மின்தடை புகார்களுக்கு 1912 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும் மற்றும் மின்னகம் எண் 9498794987 என்ற எண்ணை அழைத்து புகார்கள் மற்றும் மின் விபரங்கள் அறிந்து கொள்ளலாம்" இவ்வாறு கூறப்பட்டுள்ளது. 

தகவல் : முனைவர் _வேத கரம்சந்த் காந்தி ( செய்தியாளர் )
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇







إرسال تعليق

0 تعليقات