1) ஆண், பெண், சிறியவர், பெரியவர் ஆகிய அனைவரின் மீதும் ஃபித்ரா கடமையாகும்.
2) ஒரு நபர் வழங்க வேண்டிய ஃபித்ராவின் அளவு ஒரு ஸாஃ அதாவது சுமார் (2.4 kg) இரண்டு கிலோ நானூறு கிராம் உணவுப்பொருள்.
3) பெருநாள் தொழுகைக்கு முன்னரே ஃபித்ராவை வழங்கிவிட வேண்டும். பெருநாள் தொழுகைக்குப் பிறகு வழங்கினால் அது சாதாரண தர்மமாகவே கருதப்படும். பெருநாளைக்கு ஓரிரு நாட்களுக்கு முன்னால் ஃபித்ராவை பங்கீடு செய்வதில் தவறில்லை. எனினும் பெருநாள் தினத்தன்று வழங்குவதே சிறப்பு!
4) பெருநாள் அன்று தன் குடும்பச் செலவிற்கு பணம் மற்றும் தானியம் இல்லாதவர்கள் இத்தர்மத்தைப் பெற்றுக் கொள்ள தகுதி பெறுவர். ஜகாத்தைப் பெற தகுதியுடையவர்களும் இத்தர்மத்தை பெற்றுக் கொள்ளலாம்.
நபிமொழிகள்
ஏழைகளுக்கு உணவாகவும் நோன்பாளி செய்த தவறுகள் மற்றும் பாவங்களுக்கு பரிகாரமாகவும் நபி(ஸல்) அவர்கள் நோன்பு தர்மம்(ஜகாத்துல் ஃபித்ரை)கடமையாக்கினார்கள். பெருநாள் தொழுகைக்கு முன்னர் அதனை வழங்கிவிட்டால் அதுவே அங்கீகரிக்கப்பட்ட ஃபித்ராவாகும். அதனை பெருநாள் தொழுகைக்குப் பிறகு வழங்கினால் அது (பிறகாலங்களில் வழங்கப்படும்) தர்மங்களில் ஒரு தர்மமேயாகும். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி) நூற்கள்: அபூதாவூத் 1371, இப்னுமாஜா 1817)
2) சுதந்திரமானவர், அடிமை, ஆண், பெண், சிறியவர், பெரியவர் ஆகிய அனைத்து முஸ்லிம்களும் பேரீத்தம் பழம் அல்லது கோதுமையில் ஒரு ஸாஃ அளவு ஜகாத்துல் ஃபித்ராக வழங்குவதை நபி(ஸல்) அவர்கள் கடமையாக்கினார்கள். மேலும் அதனை பெருநாள் தொழுகைக்காக மக்கள் வெளியேறும் முன்னரே வினியோகித்துவிட வேண்டும் என்றும் கட்டளையிட்டார்கள். (அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி) நூல்: புகாரீ 1503)
3) உணவுப் பொருளில் ஒரு ஸாஃ அளவு ஜகாத்துல் ஃபித்ரை நாங்கள் வழங்கிவந்தோம் என அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரீ)
புனித ரமலானில் நம்முடைய அனைத்து வணக்க வழிபாடுகளையும் அல்லாஹ் ஏற்றருள்வானாக!
அறிவிப்பு.
செந்தலைப்பட்டினம் பொதுநல சங்கம் கடந்த 7 வருடங்களாக நோன்பு காலங்களில் கடமையாக்கப்பட்ட ஃபித்ரா எனும் நோன்பு பெருநாள் தர்மத்தை உள்ளூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருக்கும் ஏழை எளிய குடும்பங்களை கணக்கிட்டு வருடா வருடம் ஃபித்ரா வழங்கி வருகின்றது. இந்த வருடம் ஃபித்ரா வழங்க அதற்க்கான ஏற்பாடுகளை பொதுநல சங்க நிர்வாகம் செய்து வருகின்றது. எனவே பொதுநல சங்கம் மூலமாக ஃபித்ரா வழங்க விரும்பும் சகோதரர்கள் சங்க நிர்வாகிகளை தொடர்பு கொள்ளவும்...... ஃபித்ராவின் தொகை ஃபித்ராவிற்கு மட்டுமே பயன்படுத்தப்படுகின்றது....
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 تعليقات
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.