தஞ்சாவூர் மாவட்டம் களிமேடு கிராமத்தில் நடைபெற்ற தேர் திருவிழாவில் தேரின் மேல் பகுதி உயர் மின் அழுத்த கம்பியில் உரசியதால் ஏற்பட்ட மின் விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். ஆண்டுதோறும் அப்பர் மடத்தில் நடைபெறும் இந்த தேர்திருவிழாவில் ஏற்பட்ட இந்த மின் விபத்தால் தேர் முற்றிலும் எரிந்து நாசமானது. இந்த விபத்தில் 3 சிறுவர்கள் உள்பட 11 பேர் பலியான நிலையில், 10ற்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விவகாரம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தஞ்சை களிமேடு தேர்த்திருவிழா விபத்தில் இறந்தவரின் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் இழப்பீடு வழங்க முதல்வர் முக ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், "தஞ்சாவூர் மாவட்டம், களிமேடு கிராமத்தில் நடந்த தேர் விபத்தில் 11 பேர் உயிரிழந்த சம்பவத்தை அறிந்து வேதனையடைந்தேன்; உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளேன். தஞ்சை தேர்பவனியில் காயமடைந்துள்ள 15 பேருக்கும் சிறப்பான சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளேன் .விபத்து நிகழ்ந்த இடத்தில் மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தவும் உத்தரவிட்டுள்ளேன். இறந்தவரின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இறந்தவர்களின் விவரம் :-
1.மோகன் (22)
2.பிரதாப் (36)
3.ராகவன் (24)
4.அன்பழகன் (60)
5.நாகராஜ் (60)
6.சந்தோஷ் (15)
7.செல்வம் (56)
8.ராஜ்குமார் (14)
9.சாமிநாதன் (56)
10.கோவிந்தராஜ்
11.பரணி (13)
தீ விபத்து நடந்த தஞ்சை களிமேட்டிற்கு முதலமைச்சர் மு.க .ஸ்டாலின் இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொள்கிறார். சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி சென்று, அங்கிருந்து தஞ்சை செல்லவுள்ளார். தேர் விபத்தில் உயிரிழந்த குடும்பத்தை நேரில் சந்தித்து முதல்வர் ஸ்டாலின் ஆறுதல் தெரிவிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 تعليقات
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.