அரசு விரைவுப் பேருந்துகளில் பெண்களுக்கு தனி படுக்கை வசதி - போக்குவரத்துத்துறை

அரசு விரைவுப் பேருந்துகளில் பெண் பயணிகளுக்கென தனி படுக்கை வசதி ஒதுக்கீடு செய்ய தமிழ்நாடு போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

* அரசு விரைவுப் பேருந்துகளில் பெண்களுக்கு தனி படுக்கை வசதி செய்து கொடுக்கப்படும்.

* பெண்களுக்கு 1LB மற்றும் 4LB ஆகிய இருக்கைகளை ஒதுக்கீடு செய்து தரப்படும்.

* குளிர்சாதனம் மற்றும் குளிர்சாதனமில்லா பேருந்துகளில் 1UB மற்றும் 4UB இருக்கைகளை ஒதுக்க வேண்டும்.

* பேருந்து புறப்படும் வரை பெண்கள் முன்பதிவு செய்யாதபட்சத்தில் பொது படுக்கையாக கருதி மற்றவர்களுக்கு ஒதுக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇







إرسال تعليق

0 تعليقات