வாட்ஸ்அப் எப்போதும் தனது பயனர்களின் அனுபவத்தை தொடர்ந்து மேம்படுத்த முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. இதற்காக புதுபுது அப்டேட்டுகளை அவ்வப்போது வழங்குகிறது. இப்போது நிறுவனம் ஒரே நேரத்தில் 6 புதிய அம்சங்களை அறிமுகம் செய்துள்ளது.
இந்த புதிய அம்சங்கள் பயனர்களுக்கு முன்பை விட வாய்ஸ் மெசேஜ் அனுப்புதல் மற்றும் பெறுதல் போன்ற செயல்பாடுகளில் சிறந்த அனுபவத்தை வழங்கும்.
6 புதிய அம்சங்கள்.
* Out of chat playback,
* Pause and resume recording,
* Waveform visualization,
* Draft preview,
* Remember playback,
* Fast playback on forwarded messages ஆகிய அம்சங்கள் இதில் அடங்கும். இப்போது ஒவ்வொரு அம்சங்களை குறித்து விரிவாக பார்க்கலாம்..
Out of chat playback (அரட்டைக்கு வெளியே வாய்ஸ் மெசேஜ் )
வாட்ஸ்அப்பின் இந்த அம்சத்தை பயனர்கள் பெரிதும் விரும்புவார்கள். வாய்ஸ் மெசேஜை அரட்டையில் இருந்து வெளியேறிய பின்னரும் கேட்க முடியும். அதாவது, வேறு வேலைகளை ஸ்மார்ட்போனில் செய்து கொண்டே, வாய்ஸ் மெசேஜ்களை கேட்க இந்த அம்சம் அனுமதிக்கிறது. மேலும், நோட்டிபிகேஷனில் தெரியும் வாய்ஸ் மெசேஜை, அதிலிருந்தே ப்ளே செய்து கேட்க முடியும்.
Pause and Resume Recording ( பதிவை இடைநிறுத்தி மீண்டும் தொடங்கவும்)
இந்த அம்சத்தின் உதவியுடன், பயனர்கள் குரல் செய்தியை பதிவு செய்யும் போது அதை நிறுத்திவிட்டு அதே இடத்தில் இருந்து மீண்டும் தொடர முடியும். குரல் செய்தி பதிவின் போது ஏற்படும் இடையூறு காரணமாக முழு செய்தியையும் மீண்டும் பதிவு செய்வதிலிருந்து இந்த அம்சம் பயனர்களை காக்கிறது. மல்டி டாஸ்கிங் செய்வோருக்காகவே இந்த புதிய அம்சங்களை வாட்ஸ்அப் நிறுவியுள்ளது.
Waveform visualization ( அலைவடிவ காட்சிப்படுத்தல் )
அலைவடிவக் காட்சிப்படுத்தல் பயனர்களுக்கு ஒலியின் காட்சிப் பிரதிநிதித்துவத்தை வழங்கும். இது பயனர்களுக்கு பதிவு செய்வதற்கு பெரிதும் உதவும். பிரீமியம் வாய்ஸ் ரெக்காடரில் உள்ளது போல, நீங்கள் தெளிவான ஒலியை இதில் பதிவு செய்து அனுப்ப முடியும். உங்கள் ஒலியில் இடையூறுகள் இருந்தால் அலைவடிவ காட்சியில் தெளிவாகத் தெரிந்துவிடும்.
Draft preview ( வாய்ஸ் மெசேஜ் முன்னோட்டம் )
இதேபோல், ஒரு வாய்ஸ் மெசேஜை ரெக்கார்டிங் செய்துவிட்டு அப்படியே அனுப்பத் தேவையில்லை. நீங்கள் கூற விரும்பும் தகவல் அனைத்தும் அதில் இடம்பெற்றுள்ளதா என்பதை, இந்த அம்சத்தின் உதவியுடன் கேட்கலாம். ஒன்றுக்கு இருமுறை பிரிவீவ் பார்த்துவிட்டு வாய்ஸ் மெசேஜுகளை அனுப்பலாம்.
Remember Playback ( பின்னணி நினைவு )
நீங்கள் ஒரு வாய்ஸ் மெசேஜை கேட்டுக்கொண்டு இருக்கும் நிலையில், அதை இடைநிறுத்தி விட்டு வேறு வேலையை பார்க்கச் சென்றீர்கள் என்றால், மீண்டும் நீங்கள் உரையாடலுக்கு வரும்போது நீங்கள் விட்ட இடத்திலிருந்தே மீண்டும் தொடர இந்த அம்சம் அனுமதிக்கிறது.
Fast playback on forwarded messages ( முன் அனுப்பப்பட்ட வாய்ஸ் மெசேஜுகளை வேகமாக இயக்குதல் )
இந்த அம்சத்தின் மூலம், அனுப்பப்பட்ட வாய்ஸ் மெசேஜுகளை பாஸ்ட் பார்வேட் செய்து கேட்கலாம். பயனர்கள் 1.5x மற்றும் 2x வேகத்தில் குரல் செய்திகளை பாஸ்ட் பார்வேர்ட் செய்ய இந்த அம்சம் அனுமதிக்கிறது.
மேலும் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 100 எம்பி அளவுள்ள கோப்பு மட்டுமே வாட்ஸ்ஆப்பில் பகிரமுடியும் என்கிற நிலையே நீடிக்கிறது. இந்நிலையில் விரைவில் இனி ஒரே நேரத்தில் 2 ஜிபி அளவிலான பெரிய கோப்பை அனுப்பும் வசதியை அறிமுகப்படுத்த உள்ளதாக வாட்ஸ்ஆப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 تعليقات
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.