குரங்கு காய்ச்சல் என்ற புதிய வகை காய்ச்சல் பாதிப்பு பல்வேறு நாடுகளில் வேகமாகப் பரவி வருகிறது.
இதுவரை ஆஸ்திரேலியா, பெல்ஜியம், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, போர்ச்சுகல், ஸ்பெயின், ஸ்வீடன், இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய 12 நாடுகளில் 92 பேர் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை உலக சுகாதார அமைப்பும் உறுதிப்படுத்தியுள்ளது.
உடலில் வெப்பநிலை உயருதல், தலைவலி, முதுகுவலி, சின்னம்மை போன்று உடலில் கட்டி ஆகியவை குரங்கு காய்ச்சலுக்கு அறிகுறிகளாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளன. இது மனிதர்கள் மூலமாக பரவுகிறது. குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள கொப்புளங்களைத் தொடுதல், அவர்கள் பயன்படுத்திய துணிகள், படுக்கை விரிப்புகள், துண்டுகள் ஆகியவற்றை பயன்படுத்துதல் ஆகியவற்றின் மூலம், இந்த வைரஸ் பரவும். பெரியம்மை நோய்க்கு எதிரான தடுப்பூசி, குரங்கு காய்ச்சலைத் தடுப்பதில் சுமார் 85% பயனுள்ளதாக இருக்கும் என்று பல கண்காணிப்பு ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 تعليقات
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.