வங்கக்கடலில் தெற்கு அந்தமான் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இன்று காலை இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழ்த்த தாழ்வு மண்டலமாக மாறி பின்னர் மே 8 ஆம் தேதி புயலாக வலுபெறக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த புயலுக்கு ‘ஆசானி புயல்’ என்று வானிலை ஆய்வாளர்கள் பெயரிடுவார்கள் என்று கூறப்படுகிறது.
இந்த புயல் தொடர்ந்து நகர்ந்து,மே 10 ஆம் தேதி ஆந்திரா ஒடிசா கடற்கரையை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக, ஆந்திரா, ஒடிசா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தை பொறுத்தவரை இதன் தாக்கம் இருக்காது எனவும் வெப்பநிலை அதிகரிப்பு தான் இருக்கும் எனவும் இருப்பினும் சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 تعليقات
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.