ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் தனது 73 வது வயதில் இன்று (மே .13) காலமானார் என்று எமிரேட்ஸ் செய்தி நிறுவனமான WAM வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் நவம்பர் 3 , 2004 முதல் ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைவராகவும் , அபுதாபியின் ஆட்சியாளராகவும் பணியாற்றினார் .நவம்பர் 2 , 2004 வரை அதிபராக பணியாற்றிய அவரது தந்தையான மறைந்த ஷேக் சயீத் பின் சுல்தான் அல் நஹ்யானுக்குப் பிறகு இவர் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1948 இல் பிறந்த ஷேக் கலீஃபா ஐக்கிய அரபு அமீரகத்தின் இரண்டாவது ஜனாதிபதியாகவும் , அபுதாபி எமிரேட்டின் 16 வது ஆட்சியாளராகவும் இருந்தார். இவர் ஷேக் சயீதின் மூத்த மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரது மறைவு குறித்து அந்நாட்டின் ஜனாதிபதி விவகாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாட்டு மக்களுக்கும், இஸ்லாமிய தேசத்திற்கும், உலக மக்களுக்கும் இரங்கல் தெரிவிக்கப்படுகிறது. அதிபரின் மறைவுக்காக 40 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும். கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும். அமைச்சகங்கள், துறைகள், மத்திய அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது" என்று அதில் குறிப்பிட்டிருந்தது.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 تعليقات
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.