ஐக்கிய அரபு அமீரகம் முதல் முறையாக " மங்கிபாக்ஸ் ” எனும் குரங்கு அம்மை நோய்த்தொற்றை பதிவு செய்துள்ளதாக சுகாதார அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேற்கு ஆபிரிக்காவைச் சேர்ந்த 29 வயதான சுற்றுலாவாசி ஒருவருக்கு இந்த வைரஸ் கண்டறியப்பட்டதாக அமீரகத்தின் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உலகின் பல நாடுகளில் குரங்கு அம்மை தொற்று பதிவாகியதையடுத்து செயல்படுத்தப்பட்ட சுகாதார அமைச்சகத்தின் ஆரம்பகால கண்காணிப்பு அமைப்பின் ஒரு பகுதியாக இந்த தொற்று கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சகம் இது குறித்து கூறுகையில் உலகளவில் குரங்கு அம்மைநோய் பரவுவதை கண்காணித்து வருவதாகவும் அதே சமயம் உள்ளூர் தொற்றுநோயியல் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளதாகவும் கூறியுள்ளது.
வைரஸ் பரவுவதைத் தடுக்க நாட்டில் உள்ள அனைத்து மருத்துவ மையங்களிலும் சந்தேகத்திற்கிடமான நோய் பாதிப்புகளை புகாரளிக்குமாறு கூறப்பட்டுள்ளது. இது குறித்து தெரிவிக்கையில் சந்தேகத்திற்கிடமான நோயாளிகளைக் கண்டறிவதற்கான துல்லியமான வழிமுறைகளை நாங்கள் அமைத்துள்ளோம். மே 24 நிலவரப்படி , உலக சுகாதார அமைப்பு 250 க்கும் மேற்பட்ட உறுதிப்படுத்தப்பட்ட மற்றும் சந்தேகிக்கப்படும் குரங்கு அம்மைநோய் தொற்றுகளை பதிவு செய்துள்ளது. இது முக்கியமாக மத்திய மற்றும் மேற்கு ஆப்பிரிக்காவின் வெப்பமண்டல மழைக்காடுகளில் ஏற்படுகிறது என்றும் எப்போதாவது மற்ற பகுதிகளுக்கும் பரவுகிறது என்றும் ஐக்கிய அரபு அமீரக சுகாதார அதிகாரிகள் முன்பு கூறியிருந்தனர்.
பாதிக்கப்பட்ட நபர் அல்லது விலங்குடன் நெருங்கிய தொடர்பு மூலம் அல்லது வைரஸால் மாசுபட்ட பொருட்களுடன் இந்த நோய் மனிதர்களுக்கு பரவுவதாக கூறப்படுகிறது. காயங்கள் , உடல் திரவங்கள் , சுவாச நீர்த்துளிகள் மற்றும் படுக்கை போன்ற அசுத்தமான பொருட்களுடன் நெருங்கிய தொடர்பு மூலம் வைரஸ் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 تعليقات
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.