சமூக வலைதளங்களில் வரும் வதந்திகளை நம்ப பேண்டாம் - தஞ்சை மாவட்ட காவல்துறை எச்சரிக்கை 

சமீப காலமாக வாட்ஸ்அப், டெலிகிராம், பேஸ்புக், டுவிட்டர், போன்ற சமூக ஊடகங்களில் அதிகமாக வதந்திகள் பரப்பப்படுகிறது. வதந்தியைப் பருப்புவோர், அச்செய்தியைப் போட்டுவிட்டு இதை அதிகமாக ஷேர் செய்யவும் என்ற ஒரு வாசகத்தையும் சேர்த்து போட்டுவிடுவார்.

நம்மவர்களுக்கு அவ்வளவுதான், நன்மையைதானே செய்கிறோம் என்ற பெயரில், அந்த தவகல் உண்மையானதா? அல்லது பொய்யாக உருவாக்கப்பட்டதா? என்பதைப் பற்றியெல்லாம் கொஞ்சமும் சிந்திப்பதர்க்கு அவகாசம் எடுத்துக்கொள்வதே இல்லை. அந்த செய்தியை அதிகமாக பல நண்பர்களுக்கு ஷேர் செய்து விடுகின்றனர். 

எனவே தஞ்சாவூர் மாவட்ட காவல்துறை சார்பில் எச்சரிக்கை பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது சமூக வலைதளங்களில் வரும் வதந்திகளை நம்ப பேண்டாம், எனவும் நமக்கு வரும் செய்திகளின் உண்மைதன்மையை அறிந்து மற்றவர்களுக்கு பகிரவும் என அறிவித்துள்ளது.

👇👇
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇







إرسال تعليق

0 تعليقات