தமிழகத்தில் வருகிற 12 ஆம் தேதி சிறப்பு மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஜனவரி 16 ஆம் தேதி முதல் இந்தியாவில் கொரோன தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை ஒவ்வொரு வாரமும், வார இறுதி நாட்களில் சிறப்பு மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு மக்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. இவை தவிர வீடு, வீடாகச் சென்று தடுப்பூசி செலுத்தவும் சுகாதாரத்துறை ஏற்பாடு செய்திருக்கிறது. அதன்படி தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டு, அவர்களது வீடுகளுக்கேச் சென்று தடுப்பூசி செலுத்தப்படுகிறது. கொரோனா 3வது அலை படிப்படியாக குறைந்து கடந்த சில மாதஙளாக கட்டுக்குள் இருந்தது. இந்த நிலையில், தற்போது மெல்ல மெல்ல அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது.
இதனையடுத்து மே மாதத்தில் தமிழகம் முழுவதும் சுமார் 1 லட்சம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. இதுவரை 29 மெகா தடுப்பூசி முகாம்கள் தமிழகத்தில் நடத்தப்பட்டுள்ளன. அதனைத்தொடர்ந்து கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பும் அதிகரித்து வருவதால், அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும், சுகாதார கட்டமைப்புகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் எனவும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுகாதாரத்துறை செயலாளர் சுற்றறிக்கை அனுப்பியிருந்தார். இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் மெகா தடுப்பூசி முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் கூறியிருக்கிறார்.
அதன்படி ஜூன் 12ம் தேதி சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெறும் எனவும் , இந்த மெகா தடுப்பூசி முகாமில் இரண்டாம் தவணை மற்றும் பூஸ்டர் செலுத்திக் கொள்ளதவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 تعليقات
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.