பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் பயன்பாட்டுக்கு வந்தது ICU

பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அதிநவீன தீவிர சிகிச்சைப் பிரிவு பயன்பாட்டுக்கு வந்தது.

தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை அரசு மருத்துவ மனையில் செவ்வாய்க்கிழமை முதல் அதிநவீன தீவிர சிகிச்சைப் பிரிவு பயன்பாட்டுக்கு வந்தது. இந்த மருத்துவமனைக்கு பட்டுக்கோட்டை சுற்றியுள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து பொதுமக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனா். விபத்து, விஷக்கடி உள்ளிட்ட சிகிச்சைகளுக்கு முதலுதவி, சிகிச்சை வழங்கப்படுகிறது. மேல் சிகிச்சை தேவைப்படுவோா் தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனா்.

இந்நிலையில் கடந்த மாதம் காணொலிக் காட்சி வாயிலாக இந்த மருத்துவமனையில் அதிநவீன தீவிர சிகிச்சைப் பிரிவை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா். தொடா்ந்து செவ்வாய்க்கிழமை முதல் இப்பிரிவு பயன்பாட்டுக்கு வந்தது. நிகழ்வில் பட்டுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் கா.அண்ணாதுரை, நகராட்சித் தலைவா் சண்முகப்பிரியா செந்தில்குமாா், சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா் கே. திலகம், பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவா் அ. அன்பழகன், மருத்துவா் சரவணன், சுகாதார மேற்பாா்வையாளா் அண்ணாதுரை உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

    விளம்பரம்

-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇







إرسال تعليق

0 تعليقات