ஜமால் முகமது கல்லூரியின் முப்பெரும் விழாவில் முதல்வர் பேச்சு

திருச்சி ஜமால் முகமது கல்லூரியின் புதிய கட்டடத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினார்.

திருச்சி ஜமால் முகமது கல்லூரியில், கல்லூரி நிறுவனர் நாள் விழா, கல்லூரி வரலாற்றைத் தொகுக்கும் பெருந்திட்டத் தொடக்கவிழா, குளோபல் ஜமாலியன்ஸ் பிளாக்" கட்டட அடிக்கல் நாட்டு விழா என முப்பெரும் விழா, கல்லூரியின் அப்துல் கஃபூர் குளிர்மை அரங்கில் நடைபெற்றது.இவ்விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக கலந்துகொண்டார். அவரோடு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, உயர்கல்வித் துறை அமைச்சர் க. பொன்முடி, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் காதர் மொகிதீன், பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் ம. செல்வம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்

இதனைத்தொடர்ந்து ஜமால் முகமது கல்லூரியின் புதிய கட்டடத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து பேசிய அவர், கல்விக்கு புகழ்பெற்ற நகரம் திருச்சி. அந்த திருச்சியின் சிறந்த கல்லூரி ஜமால் முகமது கல்லூரி. தமிழக அமைச்சர்களாக செயல்பட்டு வரும் கே.என்.நேரு, வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் ஆகியோர் ஜமால் முகமது கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் என்று தெரிவித்தார்.

முதல்வர் உரை : வீடியோ
👇👇







-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇







إرسال تعليق

0 تعليقات