அமீரகத்தில் உள்ள மத்திய அரசு துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கான அதிகாரப்பூர்வ ஈத் அல் அதா விடுமுறை 4 நாட்களாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுமுறைஅறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அரசு மனிதவள மேம்பாட்டிற்கான பெடரல் ஆணையம் ( FAHR ) கூறுகையில் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஈத் அல் அதா விடுமுறை ஜூலை 8 வெள்ளிக்கிழமை முதல் ஜூலை 11 திங்கள் வரை 4 என நாட்கள் என்றும் ஜூலை 12 ஆம் தேதி செவ்வாய்கிழமை முதல் பணிகள் தொடங்கும் என்று தெரிவித்துள்ளது.
சவூதி அரேபியாவில் நேற்று முன்தினம் பிறை தென்பட்டதால் ஜூன் 30 ஆன நேற்று துல் ஹஜ் மாதத்தின் முதல் நாளாகவும் , ஜூலை 9 ஆம் தேதி ஈத் அல் அத்ஹா கொண்டாட இருப்பதாகவும் , ஜூலை 8 ஆம் தேதி அரஃபா தினம் என்றும் உறுதியாகியுள்ளது.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 تعليقات
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.