ரன்வேயில் சறுக்கி சேற்றில் சிக்கிய IndiGo விமானம்..

அசாம் மாநிலத்தின் ஜோர்கட்டில் இருந்து கொல்கத்தாவுக்கு இண்டிகோ விமானம் ஒன்று புறப்படும்போது அதன் ஓடுபாதையில் விலகி சென்று, சறுக்கிக்கொண்டு சேற்றுக்குள் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் விமானம் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதியடைந்தனர்.

அசாம் மாநிலத்தின் ஜோர்கட்டில் இருந்து மேற்கு வங்காள மாநில தலைநகர் கொல்கத்தாவுக்கு இண்டிகோ விமானம் ஒன்று புறப்பட இருந்தது. அந்த விமானத்தில் பயணிகளும் ஏறிச்சென்று அமர்ந்தனர். மொத்தம் 98 பயணிகள் இந்த விமானத்தில் இருந்தனர். சரியாக நேற்று பிற்பகல் 2.20 மணிக்கு புறப்பட தயாராக இருந்த அந்த விமானம், டேக் ஆப் செய்ய முயற்சிக்கும் போது ரன்வேயில் இருந்து சறுக்கியது. விமானத்தின் ஒரு பக்க டயர் ரன்வேக்கு வெளியே இருந்த புல்வெளியில் சிக்கிக் கொண்டது. விமானத்தின் ஒருபக்க டயர் சேற்றில் சிக்கியாதால் சுதாரித்துக்கொண்ட விமானி, உடனடியாக விமானத்தை நிறுத்தினார். 

இதனால் அந்தவிமானம் பெரிய விபத்துக்குள்ளாவதில் இருந்து தவிர்க்கப்பட்டது.விமானத்தில் இருந்து பயணிகளும் எந்தவித காயமுமின்றி உயிர்தப்பினர். இதைத்தொடர்ந்து விமானத்தில் இருந்து உடனடியாக பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். இதன் பின்னர் விமானம் பாதுகாப்பாக நிறுத்தும் இடத்திற்கு கொண்டு வரப்பட்டது. 
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇







إرسال تعليق

0 تعليقات