செந்தலையில் நடந்த கபாடி போட்டியில் வெற்றி பெற்ற அணிகள், வீரர்களுக்கு பரிசளிப்பு

செந்தலையில் SICC சார்பில் கபாடி போட்டியில் வெற்றி பெற்ற அணிகள், வீரர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

தஞ்சை மாவட்டம் பேராவூரணி வட்டம் செந்தலைப்பட்டினத்தில் SICC அணியினரால் நடத்தப்பட்ட 9 - ஆம் ஆண்டு கபாடி போட்டி கடந்த வெள்ளி , சனி ஆகிய கிழமை அரசு உயர்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. இப் போட்டியினை ஊராட்சி மன்றத்தலைவர் M.ரகுமத்துல்லா துவக்கி வைத்தார். இப் போட்டியில் சுமார் 18 அணிகள் பங்கு பெற்றது.

நேற்று இரவு நடந்த இறுதிப் போட்டியில் பெருமகளூர் அணி செந்தலை SICC அணிகள் போட்டியிட்டன இதில் பெருமகளூர் அணி வென்றது. இப்போட்டியில் வெற்றி பெற்ற கபாடி அணிகளுக்கு, சுழற்கோப்பையுடன் பரிசு தொகையும் வீரர்களுக்கு பதக்கமும் வழங்கப்பட்டது.

முதல் பரிசு பெருமகளூர் அணிக்கு ரூ. 7,007, செந்தலை வயல் ஊராட்சி மன்றத்தலைவர் M.ரகுமத்துல்லா அவர்கள் சார்பாக வழங்கப்பட்டது.
இரண்டாம் பரிசு செந்தலை SlCC அணிக்கு ரூ. 6,006 MKM இப்ராம்ஷா அவர்களின் சார்பாக வழங்கப்பட்டது.
மூன்றாம் பரிசு SICC - B அணிக்கு ரூ. 5,005 ஜனப்பிரியா இறால் பண்ணை சார்பாக வழங்கப்பட்டது.
நான்காம் பரிசு மருதங்காவயல் அணிக்கு ரூ. 4,004 விளங்குளம் ஊராட்சி மன்றத் தலைவர் R. செல்வம் அவர்களின் சார்பாக வழங்கப்பட்டது. வெற்றிப்பெற்ற அணிகளின் வீரர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டது.



-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇







إرسال تعليق

0 تعليقات