கட்டுமாவடி மார்க்கெட்டில் விற்பனைக்கு வந்த 100 கிலோ ராட்சத திருக்கை மீன் ரூ.10 ஆயிரத்திற்கு ஏலம் போனது.
புதுக்கோட்டை மாவட்டம் கட்டுமாவடியில் பெரிய மீன் மார்க்கெட் உள்ளது. இங்கு பத்துக்கும் மேற்பட்ட மீன் ஏலக்கடைகள் மற்றும் இறால் கம்பெனிகள் செயல்படுகின்றன. இங்கு கட்டுமாவடி, மணமேல்குடி, பொன்னகரம், புதுக்குடி, மந்திரிப்பட்டினம், சேதுபாவாசத்திரம் ஆகிய பகுதிகளில் நாட்டுப்படகு மூலம் பிடிக்கப்படும் மீன்களும், கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம், மல்லிப்பட்டினம் போன்ற பகுதிகளில் விசைப்படகு மூலம் பிடிக்கப்படும் மீன்களும் விற்பனைக்கு வருகின்றன. அதுமட்டுமில்லாமல் ராமநாதபுரம், பாம்பன், தூத்துக்குடி போன்ற பகுதிகளில் இருந்து சரக்கு வாகனங்கள் மூலமாகவும் மீன்கள் விற்பனைக்கு வருகின்றன. இந்த மீன்களை வாங்குவதற்கு திருச்சி, புதுக்கோட்டை, அறந்தாங்கி, காரைக்குடி, பட்டுக்கோட்டை என பல பகுதிகளில் இருந்து சரக்கு வாகனங்களில் வியாபாரிகள் தினமும் வந்து செல்கின்றனர்.
நேற்று வெளியூரிலிருந்து கொண்டுவரப்பட்ட விசைப்படகு மீனவர் வலையில் சிக்கிய சுமார் 100 கிலோ எடை கொண்ட ராட்சத திருக்கை மீன் கட்டுமாவடி மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு வந்தது. இது புள்ளி திருக்கை என்று அழைக்கப்படுகிறது. அவ்வப்போது இதுபோன்ற ராட்சத பெரிய வகை மீன்கள் கிடைப்பது வாடிக்கையாகும்.
ஆனால் இந்த வகையான புள்ளி திருக்கை மிகவும் அரிதாக கிடைக்கும். இந்த திருக்கை மீன் மருத்துவ குணம் நிறைந்ததாக கூறப்படுகிறது. வாகனத்தில் கொண்டு வரப்பட்ட திருக்கை மீன் ரூ.10 ஆயிரத்திற்கு ஏலம் போனது. இதுகுறித்து மீனவர் ஒருவர் கூறுகையில், மற்ற நாட்களில் இந்த திருக்கை மீன் ரூ.12 ஆயிரத்திற்கு ஏலம் போகும். ஆனால் ஆடி மாதமாக இருப்பதால் மீன் வாங்குவதற்கு ஆள் இல்லை. இதனால் குறைவாக விலை போனது. சந்தையில் இந்த திருக்கை மீன் ஒரு கிலோ ரூ.200 முதல் ரூ.250 வரை விற்பனையாகிறது என்று கூறினார்.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 تعليقات
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.