பேராவூரணி அருகே ஆந்திராவில் இருந்து லாரியில் கடத்திவரப்பட்ட 433 கிலோ கஞ்சா பறிமுதல்

பேராவூரணி அருகே உள்ள பின்னவாசல் கிராமத்தில் ஆந்திராவில் இருந்து லாரியில் கடத்திவரப்பட்ட 433 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள பின்னவாசல் கிராமத்தில், நேற்று புதன்கிழமை இரவு பேராவூரணி காவல் ஆய்வாளர் செல்வி, உதவி ஆய்வாளர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் தீவிர வாகன சோதனை ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த ஈச்சர் லாரியை சந்தேகத்தின் பேரில் சோதனை செய்த போது அதில் ரகசிய அறை அமைக்கப்பட்டு, கஞ்சா  கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது.

இதையடுத்து லாரியை பேராவூரணி காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். அதிலிருந்த 433 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, லாரி உரிமையாளரான தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள காமயக்கவுண்டன்பட்டி படையப்பா (24), மதுரை மாவட்டம் ஜெ. ஆலங்குடி ரமேஷ் குமார் (29), பேராவூரணி, பின்னவாசல் சிதம்பரம் (50) ஆகியோரை பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், இதில் திருச்சியைச் சேர்ந்த குமார் என்பவர் உள்ளிட்ட, வேறு நபர்கள் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்பதால் தனிப்படையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா சந்தை மதிப்பு ரூ 2 கோடி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇







إرسال تعليق

0 تعليقات