AMBULANCE என்ற வார்த்தையை ஏன் ECNALUBMA என தலைகீழாக எழுதிருக்கிறார்கள்? ஏன் சிவப்பு நிறத்தில் எழுதிருக்கிறார்கள்?

இன்று தெரிந்து கொள்வோம் பதிவில் ஆம்புலன்ஸ் என்றால் என்ன என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கும் அதனை பார்த்தவுடன் சிலருக்கு பயம் கூட ஏற்படும் இன்னும் சிலர் அந்த வாகனத்தில் எழுத்திற்கும் வார்த்தையை பார்த்து யோசிப்பார்கள் எதற்காக ஆம்புலன்ஸ் என்ற வார்த்தையை மட்டும் தலைகீழாக எழுத்திருக்கிறார்கள் யோசிப்பார்கள் அதன் விபரம் அறிந்தவர்களை தவிர. யோசித்தவர்களுக்கு யோசிக்காமல் இருந்தவர்களுக்கும் இந்த பதிவு உதவியாகவும் பதிலாகவும் இருக்கும்.

வாங்க இப்போது ஏன் ஆம்புலன்ஸ் என்ற வார்த்தையை தலைகீழாக எழுதுகிறார்கள் என்று தெரிந்துகொள்வோம். 

ஆம்புலன்ஸ் யார் கொண்டு வந்தது :

ஆம்புலன்ஸ் சேவை முதன் முதலாக பிரிட்டனில் உள்ள " ஆங்கிலோ சாக்ஸன் " என்ற குழு கி.பி .900 ம் ஆண்டில் தொடங்கியதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். 1487 - ம் ஆண்டில் ஸ்பெயின் நாட்டிலுள்ள பெர்டினார்ட் இசபெல்லா அவர்கள் ஸ்பெயின் இராணுவத்திற்காக போர்க்களத்தில் ஆம்புலன்ஸ்களை அறிமுகப்படுத்தினர். பெரும்பாலும் மக்களின் பயன்பாட்டுக்காகத்தான் ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டது. ஆனால் தொடக்கக் காலகட்டத்தில் இருந்த ஆம்புலன்ஸ்கள் இராணுவத்திற்க்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டது.

Ambulance என்ற வார்த்தையை தலைகீழாக ( ECNALUBMA ) எழுதிருப்பார்கள் ?

ஆம்புலன்ஸில் உள்ளவர்களில் நலனில் அக்கறை கொண்டு அவர்களுக்கு மிகவும் விரைவாக மருத்துவ உதவி கிடைக்கவேண்டும் என்ற நோக்கத்தில் ஆம்புலன்ஸிற்கு முன்னால் செல்லக்கூடிய வாகனத்திற்கு பின்னால் செல்லக்கூடிய வாகனங்களுக்கு ஆம்புலன்ஸ் வருவதை தெரிவிக்கும் நோக்கத்திற்காக Ambulance என்ற வார்த்தையை தலைகீழாக ( ECNALUBMA ) எழுதிருப்பார்கள். அப்படி எழுதினால் எப்படி தெரியும் அனைவரும் யோசிப்பீர்கள் ? பொதுவாக நாம் எந்த வார்த்தையை கண்ணாடியில் பார்த்தாலும் அது தலைகீழாக தெரியும் அதனால் முன்னால் செல்லும் வாகனத்திற்கு பின்னால் வருவது ஆம்புலன்ஸ் என்ற வார்த்தையை தலைகீழாக எழுதி இருந்தால் அதனை பார்க்கும் போது சரியாக தெரியும் என்பதற்காக ( ECNALUBMA ) இந்த வார்த்தையை அப்படி பயன்படுத்தி எழுதுகிறார்கள். 

ஏன் சிவப்பு நிறத்தில் எழுதிருக்கிறார்கள்?

சிவப்பு நிறத்தில் முன்னால் ECNALUBMA  என்ற வார்த்தை சிறிய எழுத்துக்களாக இல்லாமல் , சிவப்பு நிறத்தில் பெரிய எழுத்தாக பயன்படுத்துவதற்கு காரணம் உள்ளது. தூரத்தில் வரும்போது ஆம்புலன்ஸில் உள்ள எழுத்துக்கள் சிறியதாக இருந்தால் எளிதில் அதை கண்டு பிடிக்க முடியாது என்பதற்காக மிகப்பெரிய எழுத்துக்கள் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் அதிக வெளிச்சத்தில் வரும் போது அதன் நிறம் மங்கி தெரியக்கூடாது என்பதற்காக சிவப்பு நிறத்தில் எழுத்துக்கள் பயன்படுத்தப்படுகின்றன. பெரும்பாலும் இதுபோன்ற அனைத்து நடவடிக்கையும் ஆம்புலன்ஸ் சாலையில் என்பதை வருகிறது மக்களுக்கு தெரியப்படுத்துவதற்காகவும் , ஆம்புலன்ஸ் முன்னேறி செல்வதற்கான வழியை ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும் என்பதற்காகவும் இவ்வாறு செய்யப்படுகின்றன.

108 அவசர உதவி சேவை
108 அவசர கால சேவையானது, தேவைப்படும் மருத்துவம், காவல் மற்றும் தீ போன்றவைகளில் ஏற்படும் அவசர தேவையை, 24 x 7 மணிநேரமும் செய்யும் ஒரு சேவையாகும். இந்த சேவையானது ஆந்திரம், குஜராத், உத்தர்கான்ட், கோவா, தமிழ்நாடு, இராஜஸ்தான், கர்நாடகம், அசாம், மேகாலயா மற்றும் மத்தியபிரதேசம் போன்ற மாநிலங்களில் முழுவதுமாக செயல்பட்டுவருகிறது.

இதன் முக்கிய அம்சங்களாவது
* இது ஒரு 24 x 7 மணி நேரமும் கிடைக்கக் கூடிய சேவை.
* தொலைபேசி மற்றும் கைபேசி மூலம் கட்டணமில்லாத (டோல்ஃபிரி) எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
* அவசரகால தேவையானது சராசரியாக 18 நிமிடங்களில் உங்களுக்கு கிடைக்கும்.
* 108 எண்ணை கீழ்கண்ட தேவைகளுக்கு அழைக்கலாம்.

* உயிரை காப்பாற்றுவதற்கு.
* குற்றம் நடப்பதை அறிவிப்பதற்கு
* தீ விபத்து பற்றி அறிவிப்பதற்கு

108 அவசர கால சேவையானது, சுமார் 6800 மருத்துவமனையிடம், முதல் 24 மணி நேர சிகிச்சையை இலவசமாக வழங்கும் உடன்படிக்கையில் கையெழுத்து இட்டுள்ளது தமிழக அரசு.

-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇







إرسال تعليق

0 تعليقات