நாட்டில் தற்போதைய சூழலில் வீட்டில் பள்ளி செல்லும் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை ஏறக்குறைய அனைவரும் செல்போன் பயன்படுத்தி வருகிறோம். இதில் பலர் ஒன்றுக்கு மேற்பட்ட செல்போன்களை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் ஒவ்வொரு வீட்டிலும் பல செல்போன்களும், அதற்கான சார்ஜர்கள் உள்ளன. இதனால் எலக்ட்ரானிக் கழிவுகள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் மத்திய அரசு புதிய திட்டம் ஒன்றை கையில் எடுத்துள்ளது. அது என்னவென்றால் இந்தியா முழுவதும் அனைத்துக்கும் ஒரே மாதிரியான சார்ஜரை பயன்படுத்துவது தான். ஒருவரின் ஐபோன், ஆண்ட்ராய்டு செல்போன், டேப்லேட், லேப்டாப் என ஒருவர் தற்போது பயன்படுத்தி வரும் முக்கிய மின்னணு கேஜெட்களுக்கு பொதுவான சார்ஜர் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கையை தற்போது மத்திய அரசு துவங்கி உள்ளது.
தற்போது இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் உள்ள பெரும்பாலான போன்கள் type c சார்ஜர் C கொண்டுள்ளன. பழைய மற்றும் புதிய சாதனங்களுக்கு இடையில் சார்ஜ் ஏற்றுவதில் பிரச்சனை உள்ளது. இதனால் பொதுமக்கள் தனித்தனி சார்ஜர், கேபிள் வாங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இதனால் மக்கள் சிரமத்தை சந்திப்பது மட்டுமின்றி மின்நுகர்வு மற்றும் மின்னணு கழிவும் அதிகரிக்கிறது.
மேலும் இதுதொடர்பாக ஆகஸ்ட் 17 ல் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் தொழில்துறை அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் தயாரிப்புகள் கண்டுபிடிப்பு கூட்டமைப்புகளின் (EPIC) அறக்கட்டளை உட்பட ஏராளமானவர்கள் பங்கேற்க உள்ளனர். மேலும் தகவல் தொழில்நுட்பத்திற்கான உற்பத்தியாளர்கள் சங்கம் (MAIT), இந்திய வர்த்தக மற்றும் தொழில் சங்கங்களின் கூட்டமைப்பு (FICCI), இந்திய தொழில் கூட்டமைப்பு (CII), அசோசியேட்டட் சேம்பர்ஸ் ஆப் காமர்ஸ் அண்ட் இன்டஸ்ட்ரி ஆப் இந்தியா (ASSOCHAM), நுகர்வோர் மின்னணுவியல் மற்றும் உபகரணங்கள் உற்பத்தியாளர்கள் சங்கம் (CEAMA), இந்திய எலக்ட்ரிக்கல் & எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தியாளர்கள் சங்கம் (IEEMA) பங்கேற்க உள்ளனர். மேலும் ஐஐடி கான்பூர், இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (பனாரஸ் இந்து பல்கலைக்கழகம்) வாரணாசி, இந்தியா செல்லுலார் மற்றும் எலக்டரானிக்ஸ் அசோசியேஷன் ஆகியவையும் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன மின்னணுக் கழிவு அதிகரிப்பைக் குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 تعليقات
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.