தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில்
மறைந்த முன்னாள் அமைச்சரும், பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் கல்லூரியின் நிறுவனருமான எஸ்.டி. சோமசுந்தரம் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. கல்லூரியின் முதல்வா் ப.சீனிவாசன் வரவேற்றாா். கல்லூரியின் தாளாளா் எஸ்.டி.எஸ்.செல்வம் முன்னிலை வகித்தாா். பட்டுக்கோட்டை சரக காவல் துறை துணை கண்காணிப்பாளா் கே. பிரித்விராஜ் சௌகான் தலைமையில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது. பின்னா் போட்டியை அவா் கொடியசைத்து தொடக்கிவைத்தாா்.
படமாரத்தான் ஒட்டம் இன்று காலை நடைபெற்றது. இரு பிரிவுகளாக நடத்தப்பட்ட இப்போட்டியில் சீனியர் பிரிவு 11 & 12 வகுப்பு மற்றும் கல்லூரி மாணவர்கள் ( 5 கிலோமீட்டர் ) தூரமும், ஜூனியர் பிரிவு 8 , 9 & 10 வகுப்பு மாணவர்கள் ' ( 3 கிலோமீட்டர் ) தூரமும் நிர்ணயிக்கப்பட்டது.
இப்போட்டி காலை 7:45 மணிக்கு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியிலிருந்து துவங்கி பின்பு பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் கல்லூரியில் முடிந்தது. இரண்டு பிரிவுகளாக வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
செந்தலை மாணவன் இரண்டாம் இடம்:
தஞ்சை மாவட்டம் பேராவூரணி வட்டம் செந்தலைப்பட்டினம் மேலத்தெருவை சேர்ந்த ஜாஹிர் உசேன் மகன் மெளலான ஆஷிக் மராத்தான் சீனியர் பிரிவில் பங்கு பெற்று இரண்டாம் இடத்தை பிடித்து பரிசு மற்றும் சான்றிதழ் பெற்றார். முதல் பரிசு புதுக்கோட்டை கல்லூரியை சேர்ந்த மாணவரும் மூன்றாவது பரிசை காரைக்குடியை சேர்ந்த கல்லூரியை மாணவரும் பெற்றனர்..
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 تعليقات
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.