தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த மன்னங்காடு கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 39). பிரிண்டிங் தொழில் செய்து வருகிறார். இவருடைய மனைவி சுமதி(32). இவர்களுக்கு திருமணம் ஆகி 4 ஆண்டுகள் ஆகிறது. இந்த நிலையில் சுமதி கர்ப்பம் அடைந்தார். கர்ப்பிணியாக இருந்த சுமதி பட்டுக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து சுமதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரது குடும்பத்தினரின் அனுமதியின் பேரில் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதில் அவருக்கு ஆண்குழந்தை பிறந்தது. ஆனால் சுமதியின் உடல்நிலை மோசம் அடைந்தது. மருத்துவமனை நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் பேரில் சுமதியை திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சுமதி சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து பட்டுக்கோட்டை நகர போலீசில் ராஜேந்திரன் ஒரு புகார் மனு அளித்துள்ளார். அந்த புகாரில், தனது மனைவி சாவுக்கு காரணமான பட்டுக்கோட்டை தனியார் மருத்துவமனையில் நிர்வாகம் மற்றும் கவனக்குறைவாக செயல்பட்ட டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Source from : Dina thanthi
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 تعليقات
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.