பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு விழா

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், பள்ளி ஆண்டு விளையாட்டு விழா தலைமையாசிரியர் முதல்வன் தலைமையில் நடைபெற்றது. 

மாவட்டக் கல்வி அலுவலர் கு.திராவிடச் செல்வம், பேரூராட்சி பெருந்தலைவர் சாந்தி சேகர் முன்னிலை வகித்தனர். முன்னாள் ஒலிம்பிக் வீரர் பி.சுப்பிரமணியன் விளையாட்டு ஜோதியை ஏற்றி வைத்தார். 

பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் என்.அசோக்குமார், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று, விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். 

ஜூனியர், சீனியர், சூப்பர் சீனியர் என மூன்று பிரிவுகளில் ஓட்டப்பந்தயம், தடகளப் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன. 

மறைந்த பேரூராட்சி பெருந்தலைவர் சொ.சுப்பிரமணியன் நினைவாக, அவரது மகன்
சமூக ஆர்வலர் சுப.நற்கிள்ளி பரிசுபொருட்களை அன்பளிப்பாக வழங்கினார். 

இந்நிகழ்ச்சியில், தொழிலதிபர் லெட்சுமணன், பத்திரிக்கையாளர் கா.கான்முகமது, முன்னாள் தலைமையாசிரியர் என்.பன்னீர்செல்வம் செல்வம், முன்னாள் உடற்கல்வி ஆசிரியர்கள் கிட்டப்பா, அப்பாதுரை மற்றும் பல்வேறு பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், உடற் கல்வி ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர்கள் சோலை, முத்துராமலிங்கம் ஆகியோர் செய்திருந்தனர். 

முன்னதாக மாணவர்கள் ஒரே நிறத்திலான சீருடை அணிந்து கூட்டு உடற்பயிற்சி செய்து காட்டினர்.

செய்தி: முனைவர்
வேத கரம்சந்த் காந்தி (செய்தியாளர்)
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇







إرسال تعليق

0 تعليقات