அமீரகத்தில் VPN- ஐ சட்ட விரோதமாக பயன்படுத்தினால் 2 மில்லியன் திர்ஹம்ஸ் அபராதம்..

அமீரகம் மற்றும் வளைகுடா நாடுகளில் ( VPN ) பயன்பாடு அதிகரித்து வருவதால் தடைசெய்யப்பட்ட வலைதளங்களை இயக்கவும் பதிவிறக்கம் செய்வதற்கும் வழிவகுக்கிறது. சமீபத்திய நோர்ட் செக்யூரிட்டி தரவுகளின்படி , வளைகுடா பிராந்தியங்களில் VPN களுக்கான தேவை கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 30 சதவீதம் அதிகரித்துள்ளது. அமீரகத்தில் VPN களுக்கான தேவை அதிகரித்துவிட்ட நிலையிலும் , அதிகமான இணைய பயனர்கள் தடைசெய்யப்பட்ட இணையளத்தையே பார்வையிடுகின்றனர்.

இது குறித்து ஐக்கிய அரபு அமீரகத்தின் அரசு தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் அரசாங்க ஒழுங்குமுறை ஆணையமான ( TDRA ) நிர்வாகப் பங்குதாரரான ஆஷிஷ் மேத்தா கூறுகையில் , வழிகாட்டுதல்களின்படி அமீரகத்தில் VPN பயன்படுத்துவது சட்டவிரோதமானது அல்ல ஆகஸ்ட் 1 , 2016 அன்று ஒரு அறிக்கையில் TDRA குறிப்பிட்டுள்ளதாவது , VPN களை நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் உள்நோக்கங்களுக்காகப் பயன்படுத்தலாம். ஆனால் , அதனை சட்டவிரோதமான வழிமுறைகளுக்குப் பயன்படுத்துவது சட்டம் எண் ( 34 ) 2021 - இன் கீழ் கடுமையான குற்றமாகும்.

மேலும் , ஐக்கிய அரபு அமீரக அரசால் தடுக்கப்பட்ட இணையதளங்கள் , கேமிங் அழைப்பு , அப்ளிகேஷன்களுக்கான அணுகலைப் பெற IP அட்ரசை மறைத்து VPN- ஐப் பயன்படுத்துவது சட்டவிரோதமானது. இது சட்டத்தின் 10 வது பிரிவின் கீழ் , VPN களை தவறாகப் பயன்படுத்துபவர்களுக்கு சிறைத்தண்டனை மற்றும் 500,000 முதல் 2 மில்லியன் திர்ஹம்ஸ் வரை அபராதம் விதிக்கப்படும் என்று மேத்தா கூறினார்.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇







إرسال تعليق

0 تعليقات