இலங்கையில் நிலவி வரும் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு இடையேயும் அந்நாட்டு கடற்படை தமிழக மீனவர்களை சிறைப்பிடிப்பதை மட்டும் நிறுத்தவில்லை. அவ்வப்போது எல்லைதாண்டி வந்ததாக கூறி மீனவர்களின் வலைகளை சேதப்படுத்தி, மீன்களை எடுத்துக்கொண்டு அவர்களை விரட்டி அடிப்பதும், விசைப்படகுகளுடன் மீனவர்களை சிறைப்பிடிப்பதும் வாடிக்கையாகவே இருக்கிறது.
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படையினர் இன்று செவ்வாய்க்கிழமை (செப். 20) அதிகாலை கைது செய்தனர்.
ஜெகதாப்பட்டினம் விசைப்படகு மீன்பிடி இறங்கு தளத்தில் இருந்து 87 விசைப்படகுகளில் மீனவர்கள் திங்கள்கிழமை கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இதில் பி. தமிழ்செல்வன் (37) என்பவருக்குச் சொந்தமான படகில் அவருடன் சி.விஜி (28), ஏ.தினேஷ் (26), கே. ரஞ்சித் (27), எஸ். பக்கிரிசாமி (45), எஸ். கமல் (25), எஸ். புனுது (41) மற்றும் எம். கார்த்திக் (27) ஆகிய 8 பேர் கோட்டைப்பட்டினத்தில் இருந்து சுமார் 32 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துள்ளனர்.
அப்போது, அங்கு வந்த இலங்கைக் கடற்படையினர், எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாகக் கூறி 8 பேரையும் கைது செய்ததோடு, அவர்களது படகு மற்றும் மீன்பிடி உபகரணங்களையும் பறிமுதல் செய்தனர். இதைத் தொடர்ந்து, காங்கேசன் துறை கடற்படை தளத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 تعليقات
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.