புதுப்பட்டினம் அபு மெட்ரிகுலேஷன் பள்ளியில் ஆசிரியா் தின விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஒன்றியம், புதுப்பட்டினத்தில் அபு மெட்ரிகுலேஷன் பள்ளியில் ஆசிரியா் தின விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. விழாவுக்கு பள்ளி தாளாளா் துள்கா்னைன் தலைமை வகித்தாா். பள்ளியின் முதல்வர் விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு மீனவா் பேரவை பொதுச் செயலாளா் A.தாஜுத்தீன் கலந்து கொண்டு ஆசிரியா் தின சிறப்பு குறித்தும், ஆசிரியா்களின் தன்னலமற்ற சேவை குறித்தும் பேசினாா். விழாவில் மாணவ, மாணவிகள் சிலர் ஆசிரியர்களை வாழ்த்திப் பேசினர். இவ்விழாவில் ஆசிரியர்கள் அலுவலகப் பணியாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் ஆகியோருக்கு நம் பள்ளியின் நிறுவனர் மற்றும் தாளாளர் அவர்கள் பொன்னாடை அணிவித்து கௌரவப்படுத்தினார். மாணவா்கள், பெற்றோா்கள் கலந்து கொண்டனா்.
இவ்விழாவின் இறுதியில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நிர்வாகம் சார்பாக இனிப்பு வழங்கப்பட்டது.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 تعليقات
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.