ஃபிஃபா உலக கோப்பை 2022 கால்பந்து போட்டி கடந்த 20 ஆம் தேதி கத்தாரில் தொடங்கியது. இது டிசம்பர் 18ஆம் தேதி முடிகிறது. இந்த போட்டி 23 ஆவது கால்பந்து போட்டியாகும். முதல் போட்டி கத்தார்- ஈக்வடார் இடையே நடந்தது. இந்த நிலையில் உலக கோப்பை கால்பந்து போட்டியை காண 50 ஜிபி இணையதள டேட்டா இலவசமாக வழங்கப்படும் என்ற தகவல் வைரலாகி வருகிறது. இந்த மெசேஜுடன் ஒரு லிங்கும் உள்ளது. அதை கிளிக் செய்தால் 50 ஜிபி டேட்டா கிடைக்கும் என பரவி வருகிறது.
நன்றாக யோசித்து பாருங்கள். யாராவது 50 ஜிபி டேட்டாவை இலவசமாக கொடுப்பார்களா? தற்போது எனது போட்டோக்கள், வீடியோக்களை வைத்து என்னை மிரட்டி வருகிறார்கள். எனவே இந்த லிங்கை யாரும் கிளிக் செய்யாதீர்கள். யாருக்கும் ஷேர் செய்யாதீர்கள். போலி செய்தியை நம்பி பணத்தை இழக்காதீர்கள்.
இது குறித்து தஞ்சை மாவட்ட காவல்துறை தனது விழிப்புணர்வு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. இது போன்ற போலியான குறுஞ் செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம். சைபர் குற்றங்களுக்கு 1930- ஐ தொடர்பு கொள்ளவும். என பதிவிட்டுள்ளது.
இது போன்ற போலியான குறுஞ் செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம். சைபர் குற்றங்களுக்கு 1930- ஐ தொடர்பு கொள்ளவும்.#FakeSMS#SpamAlert#CyberFraud#Call1930#TNPolice#ThanjavurPolice#Cyber_Crime_Awareness#Readytoserve pic.twitter.com/9AaHNWZR5w
— Thanjavur District Police (@ThanjavurPolice) November 23, 2022
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 تعليقات
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.