சமூக வலைத்தளங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் பட்டியலினத்தவர் குறித்து ஆபாசமாக பேசிய பாஜக பிரமுகர் குறித்து வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிய நிலையில், போலீசார் அவரை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
சென்னை அருகே திருநின்றவூர் அடுத்த கொசவம்பாளையம், கொட்டம்மேடு பகுதியை சேர்ந்தவர் பூபதி . தொழில் நிறுவனங்களுக்கு ஆட்களை அனுப்பும் தொழில் செய்து வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இவர் தமிழக முதல்வர் ஸ்டாலின் பற்றி சமூக வலைத்தளத்தில் அருவருக்கத்தக்க ஆபாச வார்த்தைகளால் திட்டி வீடியோ வெளியிட்டிருந்தார்.
இந்த வீடியோ பதிவு பற்றி திருவள்ளூர் மத்திய மாவட்ட கிழக்கு ஒன்றிய செயலாளர் பிரேம் ஆனந்த் என்பவர் முதல்வர் குறித்து அவதூறு பேசிய நபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருநின்றவூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் SC/ST வன்கொடுமை தடுப்பு சட்டம், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல்,IT ACT உள்ளிட்ட சட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து தேடிவந்தனர்.
இந்த நிலையில் தலைமறைவாக இருந்த பூபதி வெங்கடேசனை திருநின்றவூர் காவல் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் தலைமையிலான காவலர்கள் ஆவடி அருகே கைது செய்தனர். இது குறித்து தகவலறிந்து திமுகவினர் காவல்நிலையம் வந்து ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டு விடும் என்பதால் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட பூபதி தற்போது பாஜகவில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Source from : oneindiatamil
0 تعليقات
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.