கர்நாடகத்தில் பல்கலைக் கழக வகுப்பு ஒன்றில், முஸ்லீம் மாணவனை தீவிரவாதி என அழைத்த பேராசிரியரின் விடியோ இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான விடியோவைப் பகிர்ந்துள்ள மாணவர், இஸ்லாமிய தீவிரவாதம் நகைப்புக்குரியதல்ல. இந்த நாட்டில் இஸ்லாமியனாக இருப்பதும் நகைப்புக்குரியதல்ல என உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.
மணிப்பால் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் வகுப்பறை நடந்துகொண்டிருந்தது. அப்போது பேராசிரியர் ஒருவர், முஸ்லீம் மாணவரைத் தீவிரவாதி எனக் குறிப்பிட்டு அழைத்துள்ளார். வகுப்பறையில் பல மாணவர்கள் முன்பு தன்னுடைய மதம் சார்ந்து தவறான கண்ணோட்டத்துடன் இழிவுபடுத்தியதால் மனமுடைந்த மாணவன் தொடர்ந்து பேராசிரியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இந்த வாக்குவாதம் முழுவதும் சக மாணவரால் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரலால் பகிரப்பட்டு, பேராசிரியருக்கு எதிராக கருத்துக்கள் பதிவிடப்பட்டு வருகின்றன.
கல்வி நிலையங்களில் மதச்சார்பின்மையோடு பாடம் எடுத்து எதிர்கால தலைமுறையினரை உருவாக்க வேண்டிய பேராசியர்களே, மதவெறுப்புணர்வை வளர்க்கும் நோக்கத்தில் வகுப்பறையில் பேசிய பேராசிரியருக்கு கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். அந்த விடியோவில் நடந்த வாக்குவாதம், தீவிரவாதி என அழைத்து முஸ்லீம் மாணவரைக் குறிப்பிடுகிறார் பேராசிரியர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவர் தொடர்ந்து பேராசிரியருடன் கேள்வி எழுப்புகிறார். இது நகைச்சுவையல்ல. நீங்கள் பேசியது ஏற்கத்தக்கதல்ல. நீங்கள் என் மதத்தை வைத்து கேலி செய்யவேண்டிய அவசியமில்லை. அதுவும் இத்தனை கடுமையான வார்த்தையை சொல்லி கேலி செய்வீர்களா? என்கிறார் ஆத்திரத்துடன். இதனால், மாணவரை சமாதானம் செய்ய முயற்சிக்கிறார் பேராசிரியர். நீ என் மகனைப் போன்றவன். என்கிறார்.
என் தந்தை இப்படி பேசினால், அவரை நான் தந்தையாகவே ஏற்க மாட்டேன் என மாணவன் பதிலளிக்கிறார். இது கேலியாக வந்த வார்த்தைக்கு ஏன் இத்தனை கோபமடைகிறாய் என்கிறார் பேராசிரியர்.
இல்லை சார். இது கேலிக்குரியது அல்ல. கேலிக்குரியதல்ல. இஸ்லாமிய தீவிரவாதம் கேலிக்குரியதல்ல. இந்த நாட்டில் இஸ்லாமியனாக இருப்பது மற்றும் இது போன்ற சூழல்களை எதிர்கொள்வதும் கேலி அல்ல என மாணவன் தன் ஆதங்கத்துடன் கூறுகிறார். நீ என் மகனைப் போன்றவன் என பேராசிரியர் மீண்டும் மீண்டும் கூறுகிறார். உங்கள் சொந்த மகனை நீங்கள் தீவிரவாதி என அழைப்பீர்களா? என்னை நீங்கள் எப்படி அவ்வாறு அழைக்கலாம்? அதுவும் வகுப்பறையில் இத்தனை மாணவர்கள் முன்பு. நீங்கள் கல்வி கற்பிக்கும் தொழிலைச் செய்கிறீர்கள். நீங்கள் பேராசிரியர். என்கிறார் மாணவர். இறுதியில் பேராசிரியர் மன்னிப்பு கேட்கிறார். ஆனால், மிகுந்த வேதனையடைந்த மாணவர், நீங்கள் கேட்கும் மன்னிப்பால் என்னைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்பது மாறாது. நீங்கள் உங்களை எப்படி வெளிப்படுத்திக்கொண்டீர்கள் என்பது மாறாது எனக் குறிப்பிடுகிறார். இந்த விடியோவில், பேராசிரியருக்கும் மாணவருக்குமிடையே வாக்குவாதம் நடக்கும்போது ஒரு மாணவர் கூட வகுப்பறையில் பாதிக்கப்பட்ட மாணவனுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என்பதுதான் மிகுந்த சோகம்.
இந்நிலையில் அந்த ஆசிரியரை மணிபால் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி இடைநீக்கம் செய்தது. நிறுவனம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது – “இந்த சம்பவம் குறித்து அந்த கல்லூரி நிர்வாகம் ஏற்கனவே விசாரணையைத் தொடங்கியுள்ளது. விசாரணை முடியும் வரை சம்பந்தப்பட்ட ஆசிரியர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 تعليقات
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.