பொது சிவில் சட்டம் பற்றி பாஜகவுடன் விவாதிக்கத் தயார்! ஜெயினுல் ஆபிதீன் சவால்!

பொது சிவில் சட்டம் பற்றி பாஜகவுடன் விவாதிக்கத் தயார் இடம் நாள் குறிக்கவும் என தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பின் தலைவர் ஜெயினுல் ஆபிதீன் சவால் விடுத்துள்ளார்.

திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த போது ஜெயினுல் ஆபிதின் கூறியதாவது; 
நாங்கள் பொது சிவில்சட்டம் பற்றி விவாதிப்பதற்கு பல வருடங்களாக பாஜகவுக்கு அழைப்பு கொடுத்து கொண்டு தான் இருக்கிறோம், யாரும் வரவில்லை. வேலூர் இப்ராஹிம் வந்தாலும் அவர் பாஜகவின் சார்பில் வரவேண்டும் அல்லது வேறு யார் வந்தாலும் மோடி, அமித்ஷா உட்பட யார் வந்தாலும் பாஜகவின் சார்பில் வரவேண்டும். அந்த விவாதத்தில் தோற்றுப் போனால் பாஜகவின் சார்பில் தோல்வியை ஒப்புக்கொள்ள வேண்டும். நாங்கள் பொது சிவில் சட்டம் பற்றி விவாதிக்க தயார்.''

முஸ்லிம்களுக்கு பாபர் மஸ்ஜித் வழக்கில் நியாயம் கிடைக்கவில்லை என்றாலும் அநியாயத்தை யாரும் மறந்து விடக்கூடாது என்பதற்காக சில அமைப்புகள் டிசம்பர்6 ஆர்ப்பாட்டத்தை நடத்தி வருகின்றனர். சிறுபான்மையினருக்கு வழங்கி வரும் உதவித்தொகை பல்வேறு வகையில் நிறுத்தப்பட்டு வருகிறது. இது முஸ்லிம்களை புறக்கணிக்க வேண்டும் என்று மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

திமுக அமைச்சர்களில் ஊழல் பட்டியலை வெளியிடுவதாக அறிவித்த பாஜக தலைவர் அண்ணாமலை ஊழலைப் பற்றி பேசக் கூடாது. ஆட்சியில் இல்லாதபோதே அண்ணாமலை மத்திய அரசு திட்டங்களை அமல்படுத்துவதற்கு எங்கெங்கு கமிஷன் வாங்கினார் என்ற பட்டியலை வெளியிடுவேன் என்று காயத்ரி ரகுராம் சொல்லுகிறார். அவர்கள் கட்சியில் உள்ளவர்களே அவரைப் பற்றி ஊழல் புகார் சொல்லும் போது அவர் எப்படி ஊழலை பற்றி பேச முடியும். '' இவ்வாறு ஜெயினுல் ஆபிதீன் கூறினார்.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇







إرسال تعليق

0 تعليقات