குறைஞ்ச விலைக்கு விப்பியா.." பழனியில் சாலையோர வியாபாரியை தாக்கிய கடை உரிமையாளர் கைது!

செல்போன் கவர் விற்பனை செய்யும் நபரைக் கடைக்காரர் ஒருவர் மிரட்டி அடித்த வீடியோ வெளியான நிலையில், அத்துமீறித் தாக்குதல் நடத்திய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மதுரை கே.புதூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜன். இவருக்கு ஒரு மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். குடும்பத்தை வறுமையில் இருந்து காக்க இவர், சாலையோரத்தில் செல்போன் கவர் விற்பனை செய்து வருகிறார். இதற்கிடையே இவரை அங்குக் கடை வைத்துள்ள ஒருவர் அத்துமீறித் தாக்குதல் நடத்தியுள்ளார். இந்தச் சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதில், ராஜனை பழனி பேருந்துநிலைய்ததில் கடை வைத்திருக்க்கும் சுதர்சன் செல்போன் கவரை நீ 50 ரூபாய்க்கு விற்பனை செஞ்ச நாங்கள் எல்லாம் என்ன செய்வது என மிரட்டி கன்னத்தில் அறைகிறார். மேலும், இனிமேல் பழனியில் வியாபாரம் என்று எதாவது செய்தால் நீ இருக்கவே மாட்டாய் என்றும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். நடைபாதை வியாபாரியை அடாவடியாகத் தாக்குவதை அந்த சுதர்சன் வீடியோவாகவும் எடுத்து, கடைக்காரர்கள் மட்டும் உள்ள வாட்சப் குழுவில் அந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். இது குறித்து சாலையோர வியாபாரி ராஜன் கூறுகையில், 'மதுரையில் மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகளைத் தனியாக விட்டுவிட்டு பழனியில் சாலையோரத்தில் செல்போன் கவர் விற்று வருகிறேன்.

நான் வேலை கேட்டுச் சென்ற போது, யாருமே எனக்கு வேலை தரத் தயாராக இல்லை. இதனால் குடும்பத்தைக் காப்பாற்ற வேறு வழியில்லாமல் செல்போன் கவர் வாங்கி விற்பனை செய்து வருகிறேன். ஆனால், ஒருவர் என்னிடம் வந்து செல்போன் கவர்களை விற்பனை செய்யக்கூடாது என்று மிரட்டினார்... அடித்தார். என்னை மாதிரி சாதாரண மக்களை யாரும் காப்பாற்ற முன் வரவில்லை..

பிழைக்க வேறு வழியில்லாமல் தான், நடைபாதையில் செல்போன் கவர்களை விற்பனை செய்து வருகிறேன். ஆனால், அதைக் கூடச் செய்யக் கூடாது என்று பல கடைக்காரர்கள் விரட்டியடிக்கிறார்கள். பழனி முருகனை நம்பி வெளியூர், உள்ளூர் என வித்தியாசமின்றி தினமும் ஆயிரக்கணக்கான பெரும் வியாபாரிகள், சாலையோர வியாபாரிகள், கை வியாபாரிகள் மற்றும் வடநாட்டு வியாபாரிகள் பிழைப்பை நடத்தி வருகிறார்கள். அப்படியிருக்கும் போது குடும்ப வறுமை காரணமாகச் சாலையோரத்தில் செல்போன் கவர் விற்பனை செய்யும் என்னை மட்டும் கடைக்காரர்கள் அடிப்பது ஏன் என தெரியவில்லை' என்று அவர் கூறினார். நடைபாதை வியாபாரியைக் கடைக்காரர் பிடித்து அடிக்கும் வீடியோவும் இணையத்தில் வெளியாகி பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. சம்மந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தினர்.

இதற்கிடையே செல்போன் கவர் விற்பனை செய்த மதுரையைச் சேர்ந்த ராஜன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் அவரை தாக்கிய பழனியைச் சேர்ந்த சுதர்சன் என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக சுதர்சனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீடியோ

-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇

إرسال تعليق

0 تعليقات