தஞ்சை, பட்டுக்கோட்டை உட்பட ஐந்து இடங்களில் செயல்பட்டு வந்த நகைக்கடைகள் திடீர் மூடல் உரிமையாளர் தலைமறைவு

தஞ்சை மாவட்டத்தில் ஐந்து இடங்களில் செயல்பட்டு வந்த ஒரே உரிமையாளரின் நகைக்கடைகள் திடீரென்று ஒரே நேரத்தில் பூட்டப்பட்டுள்ளது உரிமையாளர் தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் அந்த நகைக்கடையில் நகைகளை அடகு வைத்தவர்கள், நகைச்சீட்டு கட்டியவர்கள் என பணம் கட்டிய பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். 

தஞ்சாவூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, திருக்காட்டுப்பள்ளி, கும்பகோணம் ஆகிய பகுதிகளில் தனியார் நகைக்கடை செயல்பட்டு வந்தது. இங்கு நகை சிறுசேமிப்பு திட்டம், மற்ற வங்கிகளில் உள்ள அடமானம் வைத்த நகைகளை மீட்டு வட்டி இல்லா கடன் வழங்குவது போன்ற விளம்பரங்கள் மூலம் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முதலீடு செய்தனர். இந்நிலையில் பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, திருக்காட்டுப்பள்ளி, தஞ்சாவூர், கும்பகோணம் ஆகிய இடங்களில் உள்ள இக்கடைகள் மூடப்பட்டுள்ளது. அதில் முதலீடு செய்து ஏமாற்றம் அடைந்தவர்கள் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் பல கோடி ரூபாய் மோசடி நடைபெற்று இருக்கலாம் என கூறப்படுகிறது. 

தஞ்சாவூரிலுள்ள கடையில் `பல கோடி ஏமாற்றம், கடையை மூடிவிட்டு ஓட்டம்' என போஸ்டர் ஒட்டப்பட்டிருக்கிறது. இதனால் பாதிக்கப்பட்ட பலரும் நகைக்கடை முன் திரண்டதுடன், காவல் நிலையங்களிலும் புகாரளித்துவருகின்றனர்"

இது குறித்து போலீஸ் தரப்பில், ``அசோகன் தங்க மாளிகையின் உரிமையாளர் சுந்தரபாண்டியன், கடந்த 15 நாள்களாகவே கடைகளில் இருந்த நகை, வெள்ளிப் பொருள்களைக் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துச் சென்றிருக்கிறார். தலைமறைவாகும் திட்டத்துடன் அவர் இதைச் செய்திருப்பது விசாரணையில் தெரியவந்திருக்கிறது. ஒரத்தநாடு காவல் நிலையத்தில் மட்டும் 421 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன" என்றனர். இது தொடர்பாக பட்டுக்கோட்டை கிளையின் மேனேஜர் விக்னேஷ்வரன் கைதுசெய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇

إرسال تعليق

0 تعليقات