பட்டுக்கோட்டை அஞ்சல் கோட்டத்தில் ஆதார் சிறப்பு முகாம் 18-ந் தேதி வரை நடக்கிறது.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் பழனிச்சாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: - பட்டுக்கோட்டை அஞ்சல் கோட்டத்தில் உள்ள பட்டுக்கோட்டை, திருத்துறைப்பூண்டி தலைமை அஞ்சல் அலுவலகங்கள் மற்றும் வேதாரண்யம், மதுக்கூர், முத்துப்பேட்டை, பேராவூரணி, ஒரத்தநாடு, திருச்சிற்றம்பலம், கோட்டைத்தெரு உள்ளிட்ட 7 துணை அஞ்சலகங்களில் ஆதார் பதிவு மற்றும் திருத்தம் செய்ய சிறப்பு முகாம் நாளை (திங்கட்கிழமை) முதல் 18-ஆம் தேதி வரை அனைத்து வேலை நாட்களிலும் நடைபெற உள்ளது. எனவே பொதுமக்கள் மற்றும்
பி. எம். கிசான் திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகள் இந்த முகாமில் இலவசமாக புதிதாக ஆதார் பதிவு செய்யலாம்.
இதைப்போல பழைய ஆதார் அட்டையில் பெயர், முகவரி மற்றும் மொபைல் எண் திருத்தம் செய்ய ரூ. 50, பயோமெட்ரிக் திருத்தம் செய்ய ரூ. 100 கட்டணமாக செலுத்த வேண்டும். இந்த சிறப்பு முகாமை பயன்படுத்தி தகுந்த ஆவணங்களை கொண்டு வந்து ஆதார் பதிவு மற்றும் திருத்தம் செய்து கொள்ளலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 تعليقات
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.