அதிராம்பட்டினம் பகுதியில், வட மாநில தொழிலாளர்கள் அதிகளவு வருகையால், தமிழக தொழிலாளர்களுக்கு வேலை பறிபோவதாக நுாற்றுக்கும் மேற்பட்ட கட்டுமான தொழிலாளர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தமிழகம் முழுவதும் வடமாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் கட்டுமானம், தொழில் நிறுவனங்களில் அதிகளவில் பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக, டெல்டா மாவட்டங்களில் கட்டுமான பணிகளை தாண்டி விவசாய பணிகளிலும் அதிகளவில் வேலை பார்த்து வருகின்றனர். இதனால், தமிழக தொழிலாளர்களுக்கு வேலை பறிபோவதாக அவ்வப்போது போராட்டம் நடந்து வருகிறது.
இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில், வட மாநில தொழிலாளர்களுக்கு, அனைத்து கட்டிட வேலைகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்படுவதால், தமிழக கட்டிடத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட கட்டிடத் தொழிலாளிகள், சேர்மன்வாடி பகுதியில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவலறிந்த அதிராம்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிசக்கரவர்த்தி மறியலில் ஈடுபட்ட தொழிலாளிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி, சமாதானம் செய்தார். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அதிராம்பட்டினம்- பட்டுக்கோட்டை சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்துக்குப் பாதிக்கப்பட்டது.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 تعليقات
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.