ஹெல்மெட் அணிந்து மோட்டார் சைக்கிள் ஓட்டி தஞ்சை ஆட்சியர் விழிப்புணர்வு பேரணி

தஞ்சையில் சாலை பாதுகாப்பை வலியுறுத்தி ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைக்கவசம் அணிந்து மோட்டார்சைக்கிளில் விழிப்புணர்வு பேரணி மேற்கொண்டார்.

தஞ்சை மாவட்டத்தில் சாலை விபத்துகளை குறைத்து உயிரிழப்புகளை தடுக்கும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகளை ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் எடுத்து வருகிறார். அந்த வகையில் ஒரு முன்மாதிரி சாலையை ஏற்படுத்தும் நோக்கில் முதற்கட்டமாக மருத்துவக் கல்லூரி சாலையினை விபத்தில்லா பகுதியாக மாற்றுவதற்கு வட்டார போக்குவரத்து துறை, போக்குவரத்து போலீஸ், நெடுஞ்சாலைத்துறை, மாநகராட்சி, தஞ்சை மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரி, 108 ஆம்புலன்ஸ், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் உள்ளிட்ட அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து செயல் திட்டம் வகுத்து வருகிறார்.

தஞ்சாவூர் ரெட்கிராஸ் சொசைட்டி அலுவலக வளாகத்தில் நேற்று விபத்தில்லா பாதுகாப்பு பயணம், ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனம் ஓட்டுவதன் அவசியம் குறித்து இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார். அதோடு அவரும் ஹெல்மெட் அணிந்து கொண்டு மோட்டார் சைக்கிள் ஓட்டி பேரணியில் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். பிள்ளையார்பட்டி வரை இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது. செல்லும் வழியில் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனம் ஓட்டுவதின் அவசியம் குறித்து வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 

இந்த நிகழ்ச்சியில் இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி மாவட்ட சேர்மன் டாக்டர் வரதராஜன், மாவட்ட துணை சேர்மன் பொறியாளர் முத்துக்குமார், பொருளாளர் ஷேக் நாசர், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், கூடுதல் போலீஸ் சாமிநாதன், வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு நித்யா, நெடுஞ்சாலைத்துறை உதவி செயற் பொறியாளர் கீதா, மோட்டார் வாகன ஆய்வாளர் ஆனந்த், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கோட்ட மேலாளர் தமிழ்ச்செல்வன், போக்குவரத்து விபத்து விசாரணை பிரிவு உதவி ஆய்வாளர் தங்கராஜ், மாநகராட்சி உதவி பொறியாளர் ரமேஷ், 108 ஆம்புலன்ஸ் மாவட்ட மேலாளர் மோகன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇

إرسال تعليق

0 تعليقات