இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனை கணிசமாக அதிகரித்துள்ளன.. இண்டர்நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங் மட்டுமின்றி, ஜி பே (G pay), போன் பே (Phonepe) ஆகியவை மூலம் பணம் செலுத்தும் யுபிஐ பரிவர்த்தனை முறை வேகமாக அதிகரித்து வருகிறது.. ஒரு சிறிய பெட்டி கடை முதல் பெரிய ஷாப்பிங் மால்கள் வரை அனைத்து இடங்களிலும் யுபிஐ முறையில் பணம் செலுத்தி வருகின்றனர்.. க்யூ.ஆர் கோடை ஸ்கேன் செய்வது அல்லது மொபைல் எண் மூலம் நேரடியாக பணம் செலுத்த முடியும்..
இந்நிலையில் போன் பே நிறுவனம் புதிய வசதி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.. அதன்படி, போன்பே செயலியில் உள்ள யுபிஐ ஐடியை வெளிநாடுகளிலும் பண பரிவர்த்தனை செய்யலாம்.. இந்த அம்சத்தை அறிமுகப்படுத்திய இந்தியாவின் முதல் ஃபின்டெக் நிறுவனம் என்ற பெருமையை போன் பே நிறுவனம் பெற்றுள்ளது.. எனவே தற்போது வெளிநாடுகளுக்குச் செல்லும் அனைத்து பயனர்களும் தங்கள் UPI மூலம் பிற நாடுகளில் உள்ள வணிகர்களுக்கு பணம் செலுத்தலாம்.
இதற்கு முன்பு வரை வெளிநாட்டு செல்லும் போது சர்வதேச கடன் அல்லது அந்நிய செலாவணி அட்டைகள் மூலம் பணப் பரிவர்த்தனை செய்து வந்தனர்… ஆனால் போன் பே அறிமுகம் செய்துள்ள புதிய அம்சத்தால், வெளிநாடுகளில் பணம் செலுத்தும் போது பயனரின் இந்திய வங்கிக் கணக்கில் இருந்து வெளிநாட்டு நாணயத்தில் பணம் டெபிட் செய்யப்படும்.
முதல் கட்டமாக, சிங்கப்பூர், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யுஏஇ), மொரீஷியஸ், பூட்டான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளில் உள்ள எந்தவொரு சர்வதேச வணிகர்களுக்கும் உள்ளூர் QR குறியீட்டைக் கொண்டு UPI பணம் செலுத்தலாம் என PhonePe தெரிவித்துள்ளது.
போன்பே நிறுவனத்தின் இணை நிறுவனர் ராகுல் சாரி இதுகுறித்து பேசிய போது, “UPI இன்டர்நேஷனல் உலகின் பிற பகுதிகளுக்கும் UPI அனுபவத்தை வழங்குவதற்கான முதல் முக்கிய படியாகும். இந்த வெளியீடு ஒரு கேம்சேஞ்சராக நிரூபிக்கப்படும்..வெளிநாடுகளுக்கு செல்லும் இந்தியர்கள் வெளிநாடுகளில் உள்ள வணிகக் கடைகளில் போன் பே மூலம் பணம் செலுத்தலாம்..” என்று தெரிவித்தார்..
சர்வதேச UPI எவ்வாறு செயல்படும்? போன்பே சமீபத்திய வெளிநாட்டு UPI பரிவர்த்தனை வசதி மூலம், பயனர்கள் வெளிநாட்டு வணிகர்களுக்கு பணம் செலுத்த முடியும். எனவே, வாடிக்கையாளர்கள் வெளிநாட்டு பயணத்தை மேற்கொள்வதற்கு முன் அந்நிய செலாவணி அட்டை, சர்வதேச கடன் அட்டைகள் எடுத்து செல்ல வேண்டிய அவசியமில்லை.. இந்தப் புதிய அம்சத்தைப் பயன்படுத்த, போன்பே செயலியில் உள்ள UPI இன்டர்நேஷனலுக்கான வங்கிக் கணக்கை ஒருவர் செயல்படுத்த வேண்டும். பயனர்கள் பயணத்திற்கு முன் அல்லது இருப்பிடத்திலேயே செய்யலாம்.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 تعليقات
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.