தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியம், மரக்காவலசையில் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் நடைபெற்ற போராட்டத்துக்கு சரளா செந்தில் தலைமை வகித்தாா். மாவட்டச் செயற்குழு உறுப்பினா் ஆா். மனோகரன், மாவட்டக் குழு உறுப்பினா் ஆா். வாசு, ஒன்றியக் குழு உறுப்பினா்கள் ஆா். எஸ். வேலுச்சாமி, வழக்குரைஞா் வீ. கருப்பையா ஆகியோா் கண்டன உரையாற்றினா். இதில், வட்டாட்சியரக அமைதிப் பேச்சுவாா்த்தையில் ஒப்புக்கொண்டபடி, மின் இணைப்பு பெற வீட்டு வரி ரசீது வழங்குவதாக கூறி இதுவரை வழங்காத ஊராட்சித் தலைவா் மற்றும் ஊராட்சி ஒன்றிய நிா்வாகத்தை கண்டித்தும், உடனடியாக வீட்டு வரி ரசீது வழங்க வேண்டும். மரக்காவலசை கிராமத்தில் குடிமனைப் பட்டா வழங்கியவா்களுக்கும், குடிமனை இல்லாதவா்களுக்கும் உள்ளூா் கிராமத்திலேயே புறம்போக்கு இடத்தை வகை மாற்றம் செய்து குடிமனை, அரசு வீடு வழங்க வேண்டும்.
காரங்குடா பகுதியில் பெண்களுக்கு பொதுக் கழிப்பறை கட்டிக் கொடுக்க வேண்டும். கொடிவயல் பகுதியில் பிற்படுத்தப்பட்ட ஆதிதிராவிட மக்களுக்கு சமுதாயக்கூடம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. காலை 10 மணிக்கு தொடங்கிய காத்திருப்பு போராட்டம், பிற்பகல் 1 மணி வரை நீடித்த நிலையில், சேதுபாவாசத்திரம் வட்டார வளா்ச்சி அலுவலா் கிருஷ்ணமூா்த்தி சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்கள் மற்றும் மாா்க்சிஸ்ட் கட்சி நிா்வாகிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.
இதில், வட்டாட்சியா் அலுவலகத்தில் விரைந்து பேச்சுவாா்த்தை நடத்தி பிரச்னையை தீா்த்துக் கொள்ளலாம் என உறுதி அளித்ததை தொடா்ந்து காத்திருப்பு போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇

0 تعليقات
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.