அடுத்தடுத்து சோகம்! - துருக்கியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்தால் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,500ஐ கடந்துள்ள நிலையில் மீண்டும் அங்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 

துருக்கி-சிரியா எல்லையில் இன்று அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. துருக்கியின் காசியண்டெப் மாகாணம் நுர்தாகி நகரில் இருந்து 23 கிலோமீட்டர் தொலைவில், உள்ளூர் நேரப்படி அதிகாலை 04:17 மணிக்கு சுமார் 17.9 கிலோமீட்டர் (11 மைல்) ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிச்டர் அளவில் 7.8 ஆக பதிவானது. நிலநடுக்கம் ஏற்பட்ட அடுத்த 15 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் 6.7 ரிச்டர் அளவில் நில அதிர்வு ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நில அதிர்வால் துருக்கி மற்றும் சிரியாவின் எல்லைப்பகுதிகளில்ல் குடியிருப்பு கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின. 

இந்த நிலநடுக்கம் இஸ்ரேல், லெபனான் போன்ற அண்டை நாடுகளிலும் உணரப்பட்டுள்ளது. அதிகாலையில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் கட்டிடங்களில் தூங்கிக்கொண்டிருந்த நூற்றுக்கணக்கான மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த நிலநடுக்கத்தில் சிக்கியவர்களை மீட்க துருக்கி - சிரியாவின் மீட்புக்குழுவினர் களமிறக்கப்பட்டு மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதேபோல் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி நாட்டிற்கு இந்தியா மீட்பு குழுக்களை அனுப்பி வைக்கவுள்ளது.  

இந்நிலையில், நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,500ஐ தாண்டியுள்ளது. இதேபோல் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்நிலையில், துருக்கியில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்திய நேரப்படி பிற்பகல் 3.54 மணிக்கு இந்த நிலநடுக்கமானது ஏற்பட்டுள்ளது.

துருக்கியின் தெற்கு பகுதியில் உள்ள எல்பிஸ்டன் மாவட்டத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே நிலநடுக்கத்தால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்த நிலையில், மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇

إرسال تعليق

0 تعليقات