மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மின்வாரியத்திற்கு ஒரு அறிவுறுத்தலை வழங்கியது. அதன்படி, ஒரு வீடு அல்லது ஒரு குடியிருப்பு அல்லது ஒரு இடத்திற்கு ஒரே மின் இணைப்பு மட்டுமே தரப்பட வேண்டும். ஏற்கனவே ஒன்றுக்கு மேற்பட்ட மின் இணைப்புகள் கொடுக்கப்பட்டு இருந்தால் அதனை முறையாக நோட்டீஸ் கொடுத்து கட்டண விகிதப் பட்டியல் படி 1ஏ-ல் ஒரே மின் இணைப்பாக ஆக்க வேண்டும்.
நுகர்வோர் இணைப்பதற்கு முன்வராவிட்டால் அதனை 1-டி கட்டண விகிதப் பட்டியலாக மாற்ற வேண்டும். மேலும் மின் வாரியம் மின் இணைப்பு கொடுக்க அந்தப் பகுதி வாடகை ஒப்பந்தம் அல்லது குத்தகை ஒப்பந்தம் இருக்க வேண்டும். சிலர் ஒரே வீட்டில் தனித் தனிக் குடும்பமாக வாழலாம். அங்கு வாடகை ஒப்பந்தமோ அல்லது குத்தகை ஒப்பந்தமோ வருவதற்கு வாய்ப்பு இல்லை. இதனால் இதுபோன்ற குடும்பங்கள் உள்ள குடியிருப்பில் மற்றொரு கூடுதல் மின் இணைப்பு பெற்றிருந்தால் அங்கு தனி ரேஷன் அட்டை இருப்பது உறுதி செய்யப்பட வேண்டும். இதன் நோக்கம் என்னவென்றால் 100 யூனிட் மானியம் என்பது முறையாக இருக்க வேண்டும் என்பதே.
கட்டண விகிதத்தில் மாற்றம்
குடியிருப்புகளில் பொது பயன்பாட்டுக்கான மின்சார இணைப்பு 1-டி கட்டண விகிதப் பட்டியலாக மாற்றப்பட வேண்டும். ஒரு குடும்பம் உள்ள வீடு அல்லது இடம் அல்லது குடியிருப்பில் கூடுதலாக உள்ள மின்சார இணைப்புகளை ஒன்றிணைக்க வேண்டும் அல்லது அவை 1-டி கட்டண விகிதப் பட்டியலாக மாற்ற வேண்டும். அதாவது ஒரு மின்சார இணைப்பு மட்டுமே 1-ஏ கட்டண விகிதப் பட்டியலாக இருக்க வேண்டும். இதுகுறித்து தெளிவாக ஆய்வு செய்து அறியப்பட்டு பின்பு அமல்படுத்த வேண்டும் என்று மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 تعليقات
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.