பட்டுக்கோட்டையில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை மணிக்கூண்டு பகுதியில் போக்குவரத்து போலீசார், இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் வந்த இருசக்கர வாகன ஓட்டிகளை நிறுத்தி அவர்களுக்கு அறிவுரை வழங்கி, ஹெல்மெட் அணிவதன் அவசியம் பற்றி விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தையும் கொடுத்து அனுப்பினர். தொடர்ந்து எச்சரித்து அனுப்பியும் ஹெல்மெட் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்தனர்.
பள்ளி குழந்தைகளுடன் வந்த பெற்றோரை நிறுத்தி, அவர்கள் குழந்தைகளிடம், உங்கள் அப்பாவிற்கு ஹெல்மெட் அணியாததால் நாங்கள் போடும் ரூ.1000 அபராத தொகை தேவையா என்றும், ஹெல்மெட் அணியாமல் வாகன விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்டால் உங்களால் தாங்க முடியுமா? என்று கேட்டு இனி வரும் நாட்களில் உங்கள் அப்பா ஹெல்மெட் அணிந்து வர வேண்டியது உங்கள் பொறுப்பு என்று கூறி அனுப்பினர்.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 تعليقات
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.