நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக பரவிக் கொண்டிருக்கும் ‘எச்.3 என்-2’ வைரஸ் காய்ச்சல் (new viras fever) வேகமாக பரவி வருகிறது என்றும், இந்த வைரஸ் காய்ச்சல் இருமல், தொண்டை வலி, உடல்வலியை உண்டாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தற்போது தமிழ்நாட்டிலும் இந்த காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சல் பாதித்த ஏராளமானவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். காய்ச்சலை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது.
இந்நிலையில், சமீபத்தில் நாடு முழுவதும் பலரை பாதித்துள்ள தொடர் இருமல் மற்றும் குளிர் காய்ச்சலுக்கு A H3n2 என்ற வைரஸ் தான் காரணம் என்றும், இது உயிருக்கு ஆபத்து விளைவிக்கக் கூடியது இல்லை எனவும் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் சாதாரண பாராசிட்டாமல் மாத்திரை எடுத்துக் கொண்டாலே இது குணமாகும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், இதற்கு அதிக நீர் அருந்துவது, முகக்கவசம் அணிவதன் மூலம் தடுக்கலாம் எனவும் இந்திய மருத்துவ ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்திலும் இந்த வைரஸ் தொற்று அதிக அளவில் பரவி வருவதை பொது சுகாதாரத்துறை ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த வைரஸ் காய்ச்சல் சிறுவர்களையும், நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைந்த முதியவர்களையும் அதிகம் பாதிக்கிறது.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 تعليقات
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.