தஞ்சையில் மஞ்சள் பை வழங்கும் தானியங்கி இயந்திரம் தொடக்கம்

தஞ்சாவூர் கீழவாசல் சரபோஜி மார்க்கெட்டில் தானியங்கி மஞ்சள் பை வழங்கும் எந்திரம் பொருத்தப்பட்டுள்ளது.

தஞ்சை கீழவாசல் சரபோஜி மார்க்கெட் உள்ளது. இந்த வளாகத்தில் தஞ்சை மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் நெகிழி பயன்பாட்டினை அகற்றி துணியினால் ஆன மஞ்சள் பையினை பொதுமக்கள் பயன்படுத்திடும் வகையில் ரூ. 10 நாணயம் செலுத்தி மஞ்சள் பையை பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் ரூ. 10 நாணயத்தை செலுத்தினால் ஒரு மஞ்சள் பை வரும். அதனை பொதுமக்கள் எடுத்துச்செல்லாம். இந்த எந்திர பயன்பாட்டினை தொடங்கி வைத்த ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், இது குறித்து அங்கிருந்த கடைக்காரர்களிடமும், துண்டு பிரசுரம் வழங்கி பொதுமக்களிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்தினார். 

பின்னர் ஆட்சியர் கூறுகையில், தஞ்சை மாவட்டம் முழுவதும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக ரூ. 10 நாணயம் செலுத்தி மஞ்சள் பை பெற்றுக்கொள்ளும் வகையில் தானியங்கி இயந்திரம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பிளாஸ்டிக்கை தவிர்த்து மீண்டும் மஞ்சள்பை அல்லது துணிப்பைகளை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார். இந்த நிகழ்ச்சியில் மாசு கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் குணசேகரன், உதவி சுற்றுச்சூழல் பெறியாளர் விஜயபிரியா, உதவி பொறியாளர் அஜீத்குமார், மாநகர் நல அலுவலர் டாக்டர் சுபாஷ்காந்தி, மாநகராட்சி உதவி பொறியாளர் ரமேஷ், ரெட்கிராஸ் தலைவர் டாக்டர் வரதராஜன், செயலாளர் முத்துக்குமார், மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇

إرسال تعليق

0 تعليقات