யூபிஐ பரிவர்த்தனைகளுக்கு ஏப்ரல் 1ம் தேதி முதல் கட்டணம் வசூலிக்கப்படும் என தகவல் வெளியான நிலையில் யூபிஐ பரிவர்த்தனைகளுக்கு வாடிக்கையாளர்கள் கூடுதல் கட்டணமும் செலுத்த தேவையில்லை பேடிஎம் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பொதுமக்கள் அனைவரும் தங்கள் வங்கி கணக்குகளை யூபிஐ -ல் இணைத்து கொண்டனர். அதன் மூலம் கூகுள் பே, போன் பே, பேடி எம் போன்ற பண பரிவர்த்தனை செயலிகள் ஆன்லைன் பணப் பரிவர்த்தனை செயலிகள் மூலம் பொதுமக்கள் தங்களின் பணத்தை மாற்றி கொள்கின்றனர்.
யுபிஐ வழியாக ரூ.2,000-க்கு மேல் பண பரிவர்த்தனை செய்தால் இனி 1.1% கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் இந்த விதிமுறைகள் ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக தேசிய பரிவர்த்தனை கழகத்தின் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், யுபிஐ பரிவர்த்தனைகளை மேற்கொள்ள கட்டணம் வசூலிக்கப்படாது என்று பேடிஎம் நிறுவனம் அறிவித்துள்ளது. பேடிஎம் யுபிஐ பரிவர்த்தனைகள் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என்றும் எந்த விதமான கூடுதல் கட்டணமும் வாடிக்கையாளர்கள் செலுத்த தேவையில்லை என பேடிஎம் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கட்டணம் வசூலிக்கப்படும் என தேசிய பரிவர்த்தனை கழகம் கூறிய நிலையில் பேடிஎம் விளக்கம் அளித்துள்ளது. இது வாடிக்கையாளர்களுக்கிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 تعليقات
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.