செல்போன் வெடித்து 8 வயது சிறுமி பரிதாப பலி... வீடியோ பார்த்துக் கொண்டிருந்த போது விபரீதம்..!

கேரளாவில் 8 வயது சிறுமி, செல்போனில் வீடியோ பார்த்துக்கொண்டிருந்தபோது, திடீரென செல்போன் வெடித்து பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் திருவில்வமலை பட்டிப்பரம்ப குன்னத்து வீட்டை சேர்ந்தவர் அசோக்குமார் பஞ்சாயத்து உறுப்பினராக உள்ளார். இவரது மகள் ஆதித்யஸ்ரீ ( வயது 8) ஆதித்யஸ்ரீ திருவில்வமலை கிறிஸ்ட் நியூ லைப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். ஆதித்யா ஶ்ரீ  நேற்று இரவு 10.30 மணி அளவில் மொபைல் ஃபோனில் வீடியோ பார்த்து கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக திடீரென செல்போன் வெடித்து சிதறியதில், சிறுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மோசமான பேட்டரி காரணமாக செல்போன் வெடித்து சிதறியதாக கூறப்படுகிறது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், செல்போன் வெடித்ததற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து குழந்தைகளிடம் அதிக நேரம் மொபைல் போனை கொடுக்க வேண்டாம் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

கவனம் தேவை :
பொதுவாக குழந்தைகள் அதிக நேரம் செல்போன்  பயன்படுத்துவதால் அதிக பாதிப்பு இருப்பதாக தெரிவித்துள்ள சமூக ஆர்வலர்கள் குழந்தைகள் செல்போன் பயன்படுத்தும் நேரத்தை பெற்றோர் கூடுமானவரை குறைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇

إرسال تعليق

0 تعليقات