வங்கதேசத்தில் துணி சந்தையில் பயங்கர தீ விபத்து

வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள துணி சந்தையில் திடீரென மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

வங்கதேசத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை தலைநகர் டாக்காவில் 3000 கடைகள் கொண்ட வணிக சந்தையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்து புகழ்பெற்ற துணிச்சந்தைகள் அமைந்த பங்காபஜாரின் நெரிசலான தெருக்களில் பரவியதை தொடர்ந்து, தீயை அணைக்க ராணுவ வீரர்கள் வரவழைக்கப்பட்டனர்.

இதுவரை உயிர் சேதம் எதுவும் பதிவாகாத நிலையில், தீயை அணைக்கும் பணியில் 50 தீயணைப்பு படைகள் மற்றும் ராணுவ வீரர்கள் செவ்வாய்கிழமை ஈடுபட்டுள்ளதாக தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். பெரும்பாலான கடைகள் தீயில் எரிந்து சாம்பலாகி இருக்கும் நிலையில், உள்ளே யாரும் சிக்கியிருக்கிறார்களா என்பது தெரியவில்லை என்று தீயணைப்புத் துறை அதிகாரி ரஷீத் பின் காலிட் தெரிவித்துள்ளார்.

பங்காபஜாரில் பெரும்பாலான துணிக்கடைகளில் ஈத் பண்டிகைக்காக பொருட்கள் சேமித்து வைத்து இருந்த நிலையில், இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇

إرسال تعليق

0 تعليقات