பேராவூரணியில் ஜமாலியா மஸ்ஜித் பள்ளிவாசலில் புனித ரமலான் நோன்பு திறப்பு இப்தார் நிகழ்ச்சி

தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் இன்று ஜமாலியா மஸ்ஜித் பள்ளிவாசலில் புனித ரமலான் நோன்பு திறப்பு இப்தார் நிகழ்ச்சி நகர வர்த்தக கழகத்தின் சார்பாக நடைபெற்றது, மாலை 4.30 மணி அளவில் அனைவருக்கும் நோன்பு கஞ்சி வழங்கப்பட்டது பின்பு மாலை 6.30 மணி அளவில் வர்த்தகர் கழக நிர்வாகிகள் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு பள்ளிவாசல் பணியாளர்களுக்கும், நோன்பு கஞ்சி காய்ச்சும் ஊழியர்களுக்கு புத்தாடை வழங்கப்பட்டது பின்பு நோன்பு திறக்கும் நிகழ்ச்சி மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக அமைந்தது.

முன்னதாக ஜமாத் தலைவர் அப்துல் முத்தலிப் அவர்கள் வர்த்தகர் தலைவர் R.P. ராஜேந்திரன் அவர்கள் செயலாளர் S. திருப்பதி அவர்கள் பொருளாளர் L.A.M. சாதிக் அலி அவர்கள் மற்றும் கட்டுப்பாட்டு கமிட்டி உறுப்பினர்கள் S. கந்தப்பன் பாரதி வை நடராஜன் R . வெங்கடேசன் P.S அப்துல்லா மற்றும் நிர்வாகிகள் பொதுக்குழு உறுப்பினர்களை வரவேற்றார் நிறைவாக ஜமாத்து பொருளாளர் கான் முகமது அவர்கள் நன்றி கூறினார்கள்.

-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇

إرسال تعليق

0 تعليقات