புதுக்கோட்டை மாவட்டம் கட்டுமாவடியில் பெரிய மீன் மார்க்கெட் உள்ளது. இங்கு பத்துக்கும் மேற்பட்ட மீன் ஏலக்கடைகள் மற்றும் இறால் கம்பெனிகள் செயல்படுகின்றன. இங்கு கட்டுமாவடி, மணமேல்குடி, பொன்னகரம், புதுக்குடி, மந்திரிப்பட்டினம், சேதுபாவாசத்திரம் ஆகிய பகுதிகளில் நாட்டுப்படகு மூலம் பிடிக்கப்படும் மீன்களும், கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம், மல்லிப்பட்டினம் போன்ற பகுதிகளில் விசைப்படகு மூலம் பிடிக்கப்படும் மீன்களும் விற்பனைக்கு வருகின்றன.
இங்கு அரியவகை மீன்களும், ராட்சத மீன்களும் விற்பனைக்கு வருகின்றன. இந்த நிலையில் வடக்கு அம்மாமாபட்டினத்தைச் சேர்ந்த மீனவர் நிசார் என்பவரின் வலையில் ராட்சத திருக்கை மீன் சிக்கியது. இந்த திருக்கை மீன் புள்ளித்திருக்கை என்ற வகையை சேர்ந்தது ஆகும். 65 கிலோ எடை கொண்ட இந்த திருக்கை மீன் கட்டுமாவடி மீன் மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது. இது ரூ.7 ஆயிரத்து 800-க்கு ஏலம் போனது. இந்த திருக்கை மீனை உள்ளூர் வியாபாரி ஒருவர் ஏலம் எடுத்தார். இந்த ராட்சத திருக்கை மீனை பொதுமக்கள் ஆச்சரியமாக பார்த்துச் சென்றனர்.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 تعليقات
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.