பேராவூரணியில் இருந்து திருப்பதிக்கு அரசு விரைவு போக்குவரத்து சேவை தொடங்கி வைக்கப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் இருந்து திருப்பதிக்கு விரைவு பேருந்து இயக்க வேண்டும், இரவு 8 மணிக்கு மேல் பேராவூரணி நகருக்குள் வந்து செல்லும் வகையில் வெளியூர் தொலைதூரப் பேருந்துகளை இயக்க வேண்டும்" என சட்டமன்றத்தில் பேராவூரணி எம். எல். ஏ என். அசோக்குமார் கோரிக்கை விடுத்தார். இதற்கு பதில் அளித்த போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர், "திருப்பதிக்கு உடனடியாக பேருந்து இயக்கப்படும்" என அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு பேராவூரணி பேருந்து நிலையத்திலிருந்து திருப்பதி செல்லும் அரசு விரைவுப் பேருந்து சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் விரைவுப் போக்குவரத்துக் கழக திருச்சி கோட்ட மேலாளர் முருகேசன், கும்பகோணம் கிளை மேலாளர் சேகர், பேராவூரணி கிளை மேலாளர் மகாலிங்கம், திமுக மாவட்ட அவை தலைவர் சுப. சேகர், ஒன்றியச் செயலாளர்கள் க. அன்பழகன், மு. கி. முத்துமாணிக்கம், வை. ரவிச்சந்திரன், இளங்கோவன், நகரச் செயலாளர் என். எஸ். சேகர், முன்னாள் மாவட்ட துணைச் செயலாளர் என். செல்வராஜ், மாவட்ட கவுன்சிலர்கள் அலிவலம் மூர்த்தி, சுவாதி காமராஜ், மக்கள் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள், திமுகவினர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 تعليقات
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.